பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ.வள்ளியப்பா

❖ 7


தும் நன்றாக வலைக்குள் அகப்பட்டுக் கொண்டது. அந்தச் சமயம் பார்த்து வேடன் வந்தான். என்னை வலையிலிருந்து விடுவித்தான்; என் கால்களை நன்றாகக் கட்டித் தூக்கிக் கொண்டு போனான்.”

“தூக்கிக் கொண்டு போனானா? எங்கே அம்மா?” என்று பரபரப்புடன் கேட்டது குட்டி மான்.

“என்னைக் கொண்டு போய், அவன் ஒரு பெரிய பணக்காரரிடம் விற்று விட்டான். அந்தப் பணக்காரரின் வீடு ரொம்பப் பெரிய வீடு. வீட்டைச் சுற்றிப் பெரிய தோட்டமும் இருந்தது. அவர் வீட்டில் இருந்த ஒரு பையனும் பெண்ணும் என்னைப் பார்த்ததும் துள்ளிக் குதித்து வந்தார்கள். தோட்டத்திலேயிருந்த ஒரு பெரிய கூடத்தில் என்னைக் கட்டிப் போட்டார்கள். எனக்கு ஒரே வருத்தம். ‘இனிமேல் என் அப்பா அம்மாவைப் பார்க்கவே முடியாதே! மற்ற மான்களுடன் சேர்ந்து சுற்ற முடியாதே!’ என்றெல்லாம் நினைத்து நினைத்து ஏங்கினேன்.

“அந்தப் பிள்ளைகள் என்னிடம் மிகவும் பிரியமாகத்தான் இருந்தார்கள்; என்னைக் கட்டி அணைத்துக் கொண்டார்கள்; கன்னத்தில் முத்தம் கொடுத்தார்கள். முள்ளங்கி, காரட், முட்டைக் கோஸ், தக்காளி, வாழைப்பழம் எல்லாம் கொண்டு