பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

குமரியின் மூக்குத்தி

வேண்டாமென்று சொல்லட்டும். என்ன இருந்தாலும் நான் சின்னவன்தானே?

முதல் மந்திரிக்கு எரிச்சலாக வந்தது; ஆனாலும், உங் ளுடைய அற்புதமான புத்திசாலித்தனத்தை மகா ராஜாவே மெச்சும்போது நாங்களெல்லாம் தனியே அதைப்பற்றிச் சொல்லவேண்டுமா?’ என்று அதை வெளிக்காட்டாமல் பதில் சொன்னார். -

"என்ன மாறுதல் செய்யவேண்டும்? அதைச் சொல்லுங்கள்” என்று மன்னர் அவசரப்படுத்தினார்.

"இதோ சொல்கிறேன்: திருடினவனே நாம் போய்ப் பிடிக்கக்கூடாது; பொருளை இழந்தவர் அழைத்துவந்து முறையிட்டால் விசாரித்து இழந்த பொருளுக்கு ஒரு மதிப்பு வைத்து அதில் பாதியை அபராதமாக வசூலித்து விடலாம்.”

"பொருளை இழந்தவனுக்கு அந்தப் பொருளைத் திரும்பத் தரவேண்டாமா?" என்று முதல் மந்திரி கேட்டார்.

"அதைப்பற்றி நமக்கு என் கவலை? திருடன் குற்றம் செய்தால் அவனைத் தண்டிப்பது நம் கடமை; அதைத்தான் செய்கிறோம்; அபராதம் வாங்குகிறோம்” என்று வியாக்கியானம் செய்தார் சேனாபதி.

அதன்படியே சட்டசபையில் பழைய சட்டத்திற்குத் திருத்தம் வந்து நிறைவேறியது. அதை நிறைவேற்றி வைத்த பிறகு முதல் மந்திரி அரசரிடம் ஒரு விண்ணப்பம் செய்துகொண்டார். தாம் பல காலமாகத் தலயாத்திரை செய்வதாகப் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பதாகவும் தம் வேலையிலிருந்து ஒய்வு பெற்று அவ்வாறு செய்ய அநுமதிக்க வேண்டுமென்றும் பணிவுடன் வேண்டினார்.

அரசர் முதலில் சிறிது யோசித்தாலும், பிறகு அவர் விருப்பப்படியே அவரை முதல் மந்திரிப் பதவியிலிருந்தும் விடுதலை செய்தார். அடுத்தபடி சேனாபதியே முதல் மந்திரி