பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெண் உரிமை

117

 மனைவியின் பெயரில் எழுதுவார்களாம். பெண்களின் உரிமையை வற்புறுத்தும் இந்தப் பேர்வழி, நிச்சயமாக ஒரு பெண்ணுகவே இருக்க வேண்டும். பெண்கள் பேரை ஆண்கள் உபயோகித்துக் கொள்ளும்போது ஏன் நாம் ஆண் பெயரை வைத்துக்கொள்ளக் கூடாது என்று தோன்றியிருக்கும். யாரோ சுந்தரி என்ற பெயர் உள்ளவளே சுந்தரேசன் என்று எழுதுகிறாள் போலிருக்கிறது” என்று கல்யாணி உற்சாகத்தோடு சொன்னாள்.

இப்படியே பொழுது போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் சென்னையிலிருந்து ஓர் இளைஞன் திருச்சிக்கு வந்தான். அவன் கமலத்தின் தகப்பனர் நாராயணனுடைய நண்பர் ஒருவருடைய பிள்ளை; அக்கெளண்டண்ட் ஜெனரல் காரியாலயத்தில் வேலை பார்க்கிறவன். ராமகிருஷ்ணன் என்பது அவன் பேர்.

பூநீரங்கம், திருவானைக்காவல் இரண்டையும் பார்த்து விட்டுப் போகலாம் என்று நாலு நாள் விடுமுறை பெற்றுக்கொண்டு வந்தான் ராமகிருஷ்ணன். நாராயணன் வீட்டில்தான் தங்கினான். .

கமலமும் கல்யாணியும் வழக்கம்போல் தொடர் கதைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். புனை பெயரைப்பற்றிய பேச்சும் வந்தது, 'நீங்கள் பத்திரிகைகளைப் படிக்கிறது உண்டோ?” என்று கேட்டான் சென்னையிலிருந்து வந்த இளைஞன் ராமகிருஷ்ணன். . . .

"அதைத் தவிர வேறு வேலையே கிடையாது?" என்று சொல்லிச் சிரித்தார் நாராயணன்.

"யாருடைய கதைகள் உங்களுக்குப் பிடிக்கும்?' என்று கேட்டான் ராமகிருஷ்ணன், -

'உங்களுக்கு யார் கதை பிடிக்கும்?” என்று கமலம் கேட்டாள். - .

'எனக்கு எழுத்தாளர் எல்லோருமே நண்பர்கள். அதனால் எல்லோருடைய கதையும் பிடிக்கும்” என்ருன் அவன்.