பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

சொக்குப் பேச்சு

அத்தை மகளைத் திருமணம் செய்துகொள்ள ஆசை கொண்டவனின் உள்ளக் கிளர்ச்சிகளைப் பார்த்தோம்.

அவனுடைய ஆசை நிறைவேறாத காலத்தில் அவன் கட்டுகிற மனக்கோட்டையையும் பார்த்தோம்.

ஆசை நிறைவேறிய ஒருவனுடைய உள்ளக் கிளர்ச்சிகளை இப்பொழுது பார்ப்போம்.

அவன் ஒர் உழவன். கழனியிலே வேலை செய்துகொண்டிருக்கிறான். கழனியிலே வேலை செய்கிறவர்கள் குறித்த நேரத்தில் வீட்டுக்குப் போய் உணவருந்த முடியாது. வீடு தொலைவிலிருக்கும். அங்கு போய்த் திரும்புவதென்றால் நேரமாகும்; வேலை கெட்டுப் போகும்.

கிணற்றிலிருந்து தோட்டத்துக்குத் தண்ணிர் இறைக்கிறவன் அதிகாலையிலே தனது வேலையைத் தொடங்குவான். வெய்யில் ஏற ஏற மாடுகள் களைத்துப் போகும். மேலும்