இதழ்கள்
47
இதழ்கள் 47
முழி முழியென்று முழிக்கிறதைப் பார். மறுபடியும் முகத்தை அலம்பி அழகுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று அலுத்து வருகிறதடி, அம்மா இறக்கி எத்தனை நாழிகையாயிற்று? இன்னும் நாற்றம் மூக்கைப் பொசுக்குகிறது. வாசலில் போகிறவர்களுக்கெல்லாம், நான் பொங்கி விட்டேன், நான் பொங்கிவிட்டேன்’ என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு அவர் இப்போது வந்தால் நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற கிண்டலாய் ஏதாவது சொல்வார், அதனால் என்ன பர்ன யில்லை! இந்த உலகத்திலே மூக்கு ஒழுகாத குழந்தையும், சாதத்தைக் குழைக்காத பெண்பிள்ளையும், பால் பெர்ங்காத விடும் இல்லவே இல்லை. இது பெரியவர்களிலிருந்து சின்ன வர்கள் வரை, மாமியாரிலிருந்து மாட்டுப் பெண்வரை மறுக்க முடியாத உண்மை' என்பார். இருந்தாலும் நாம் என்னவோ மாமிசம் தின்னாதவர்கள் என்று பெருமை அடித்துக் கொள்கிறோமே, பால் சாப்பிடலாமோ? அது மாத்திரம் என்ன, பசுவின் ரத்தந்தானே? இல்லாவிட்டால் அப்படித் திய்ந்த வாசனை அதற்கு எப்படி வரும்? பாலைப் பற்றி இப்படி நினைத்தால் இப்போதே உவ்வே என்கிறது. எப்படி இருந்தால் என்ன? பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ. இனிமேல் நித்தம் குடித்தாக வேண்டும்; கால் படியை ஆழாக்காய்ச் சுண்டக் காய்ச்சிக் குங்குமப்பூவை அரைத்துப் போட்டு, கற்கண்டைப் பொடித்துப் போட்டு...அப்போது தான்-’ அப்பொழுதுதான் அவளுக்கு அவள் மகன் ಥಿಣ57 திரும்பவும் வந்தது. கண்ணாடியிலிருந்து திரும்பினாள்.ஆன் ஊஞ்சலில் மில்ல்ாந்து படுத்திருந்தான். முகம் முற்றத்தின் மேல் கவிந்த ஆகாயத்தின் பக்கம் திரும்பிச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. அம்மாதிரியான சமயங்களில் அவனைப் பார்க்க அவளுக்கு அச்சமாக இருந்தது. அந்த முகத்தில் வயசின், எங்கேர்'தடைப்பட்டு, உள்ளும் புறமும் அற்று ஆ. தெளிந்து.தின்றது. தன் ஆழத்துள் ஜலம் நலுங்கிய