இதழ்கள்
49
இதழ்கள் #9
'இல்லை, யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறேன்.” "ஓஹோ, யோசனை? அதென்னடா அப்படி ஒரு யோசனை?” 'அம்மா, தூங்குகிறதென்றால் என்ன, விழிப்பு என்றால் என்ன?” 'தூங்குகிறதென்றால், தூங்குகிற தென்றால்- அவள் விரல்கள் இதழ்களாய்க் குவிந்து மலர்ந்து தவித்தன. 'துரங்குகிறதென்றால் கண்ணை மூடிக் கொண்டு...” 'இல்லை!” அவன் எழுந்து உட்கார்ந்தான். 'நானுந்தான் கண்ணை மூடிக் கொண்டே இருக்கிறேன்; அப்படி என்றால் இப்போது தூங்கிக் கொண்டே இருக் கிறேனா?” . . "கண்ணா! கண்ணா!” அவள் பதறிப் போனான்; விழியோரங்கள் பிடுங்கிக் கொண்டு பெருக்கெடுத்தன. அந்த நிஜ வித்தியாசம் என்ன? “ராத்திரி-பகல்...” கடன்காரன்! இவன் எதிரில் வார்த்தைகள் வர மாட்டேன் என்கின்றன. வந்தாலோ புரியாத பாஷை இன்று ஏன் இப்படி என்னை வதைக்கிறான்? அம்மா! மூளை குழம்பு கிறதே 'அம்மா, அம்மா! நீ இப்போது துரங்கிப் போய் விட்டாயா?” 'இல்லை' . 'அம்மா, துரங்குகிறதென்றால் என்ன? விழித்துக்கொண் டிருக்கிறது என்றால் என்ன?” தெரியாது!” - ராத்திரி என்றால் என்ன? பகல் என்றால் என்ன?” 'தெரியாது!” 'கண்ணை மூடிக் கொண்டிருக்கிறதென்றால் என்ன? திறந்து கொண்டிருக்கிறதென்றால் என்ன?” 'தெரியாது." அவள் குரல் மிகவும் பணிவில் த 'உனக்குத் தெரியாதென்றால் யாருக்குத் அப்பாவுக்குத் தெரியுமோ?”