5 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ
என்று கேட்டார். "இது மூன்றாந்தரம்" என்றார். இவர், "ஆனாலும் பேச்சு மட்டும் முதல்தரம் என்று கூறி அவரைக் கிளு கிளுக்க வைத்தார்.
பருத்தித் துறை
யாழ்ப்பாணத்தில் பருத்தித் துறை என்ற ஊர் ஒன்று இருக்கிறது. அங்கே ஒரு பள்ளிக்கூடத்தில் இவர் பேசப் போயிருந்தார். கூட்டத்துக்கு வந்திருந்த புலவர் ஒருவர் தாம் இயற்றிய நூல் ஒன்றை இவரிடம் அளித்தார். உடனே இவர், "இடத்துக்கு ஏற்ற கொடை இது" என்றார். "எப்படி?" என்று புலவர் கேட்க, "இது பருத்தித் துறை அல்லவா? இங்கே நூல் கிடைப்பது பொருத் தந்தானே?" என்றார் இவர்.
தையலும் நூலும்
யாழ்ப்பாணத்தில் முன்பு ஈழகேசரி என்ற பத்திரிகையைப் பொன்னையா என்பவர் நடத்தி வந்தார். அவர் தம் அலுவலகத்துக்கு வர வேண்டுமென்று இவரை அழைத்திருந்தார். இவர் போனார், பண்டித கணேசையர் அவர்கள் வெளியிட்டிருந்த தொல்காப்பியப் பொருளதிகார உரையைப் பொன்னையா தம்முடைய திருமகள் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டிருந்தார். இரண்டு தொகுதிகளாக வெளியாயிற்று. இவர் வந்தபோது அந்தத் தொகுதிகளைத் தம் பெண் புவனேசுவரியைக் கொடுக்கச் சொல்லிப் படம் எடுக்கச் செய்தார். அந்தப் பெண்ணிடம் புத்தகத்தை வாங்கிக் கொண்ட இவர், "தையல் வழங்கும் நூலை பெற்றேன். பொருத்த மானதுதானே?" என்றார்.