பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶 தர்களின் ஐம்பெருங்கட்டுரைகள்

நவீனத் தற்காப்புக் கருவிகளை ஸம்பாதிப்பதில் ஜப்பான் அஜாக்ாதையாக இருக்கவேண்டுமென்று நான் கணமேனும் கூறவில்லை. ஆனல் ஆத்மலம்ரக்ஷணையளவுக்கு மிஞ்சி அக்கருவிகளே வேண்ட லாகாது. உண்மையான் சக்தி ஆயுதங்களில் இல்லை. அவற்றைக் கையாளும் மனிதனிடம் உள்ளதென் பதை அறியவேண்டும். மனிதன் பலத்தை வேண்டி, ஆத்மாவுக்குத் தீங்கு நேருமளவு ஆயுதங்களே வளர்த்தால், அவற்ருலே அவனுடைய பகைவருக்கு நேரும் ஆபத்தைக் காட்டிலும், அவனுக்கே அதிக ஆபத்தாகிறது.

உயிருடைய வஸ்துக்களைக் காயப்படுத்துதல் எளிது. ஆதலால், அவற்றுக்கு ஸ்ம்ரசனே வேண் டும். இயற்கையிலே உயிர் தன்னைத் தனது சொந்த வஸ்துங்களாலே செய்த போர்வைகளால் காக்கிறது. அது பற்றியே அவை உயிரின் வளர்ச்சியுடன் இசை பொருந்துகின்றன. இல்லாவிட்டால் காலம் வரும் போது அவை உடைந்து போகும். எளிதிலே மறைந்துபோகும். உயிருள்ள மனிதனுக்கு உண்மை யான கவசம் அவனுடைய ஆத்ம ஆதர்சங்களேயாம். அவை அவனுடன் ஜீவ ஸம்பந்தமுடையன. அவன் வளர்ச்சியுடனே வளர்வன : துரதிர்ஷ்டவசத்தால் அவன் தனக்குச் சில ஸ்மயங்களில் உருக்கிளுல் செய்த, செத்த, யந்த்ரதுல்பமான கவசங்களையும் உபயோகிக்க நேரிடுகிறது. அப்போது அவற்றின் கொடுமையிலிருந்து தன்னக் காப்பதில் ஜாக்ரதை யாக இருக்கவேண்டும். அவன் பலஹீனனய், போர்வைக்குத் தக்கபடி உடம்பைக் குறுக்கிக் கொண்டு போனல், நாளடைவில் ஆத்மா சுருங்கித் தற்கொலேயாக முடியும். அந்தத் தற்கொலையின் வழியை மேற்கு ஜாதியார் அனுசரிப்போராகித் தாங்கள் அதிகாரத்திலிருக்கவும், பிறரை அடக்கி