பக்கம்:சரணம் சரணம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவறுமையைப் போக்கும் வழி 25

சோம்பலாலும் இறைவியை வழிபடுவதாகிய தவத்தைச் செய்யாமல் இருப்பவர்கள் ஒரு வகையினர். அவர்கள் இந்த உடம்பு பெற்றும் பெற வேண்டிய பேற்றை இழந்த வர்கள். இன்னும் ஒரு வகையினர் இருக்கிரு.ர்கள். அவர்கள் தவம் செய்யாமல் இருப்பது வியப்பன்று. தவம் செய்வாரைக் கண்டால் அவர்களே அனுகாமல் இருப் பார்கள். நல்ல செயல்கள் செய்யும் வாய்ப்புக் கிடைத் தாலும் அந்த வாய்ப்பை வேண்டுமென்றே தட்டிக் கழித்து விடுவார்கள். தவம் செய்யக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டவர்கள் இவர்கள். இவர் களோடு சேர்ந்தால் தவும் செய்ய வேண்டும், கோயிலுக் குப் போகவேண்டும் என்ற விருப்பம் உடையவர்களும் மாறி விடுவார்கள். இத்தகையவர்கள் தவம் செய்யப் பயிலாமல் இருக்கிரு.ர்கள் என்று சொல்லக்கூடாது. தவத்தைப் பயிலக்கூடாது என்ற கொள்கையையே கல்வி யாகக் கற்றுப் பிறரையும் தம் வழியே இழுக்கிறவர்கள் இவர்கள். இத்தகையவர்களுடைய தொடர்பிளுல் மக்களுக்குச் சிறிதளவு இருக்கும் நல்லுணர்ச்சிகூட இல்லாமல் போய்விடும். இவ்வாறுள்ள கயவர்களிடம், இழிந்த இயல்புடையவர்களிடம், ஆசிரியர் ஒரு காலத் .திலும் போகமாட்டார்; போய் யாசகம் செய்ய மாட் டார். அத்தகைய நிலையில் அம்பிகை அவரை வைத்திருக் .கிருளாம்.

நித்தம் நீடு தவம் EE66 I 6LD கறற கயவாதமபால

ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. திரிபுராம்பிகையின் திருவருளே இத்தகைய கயவர் களிடம் சென்று ஒன்றை யாசிக்கும் நிலேயைப் பெருமல் வைத்ததாம். ஆதலின் அவள் திருவடியை அடைந்தால் இரந்து நிற்கும் இழி தகைமை வராது.

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/35&oldid=680612" இலிருந்து மீள்விக்கப்பட்டது