உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் உரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் சிறப்பு: கண்டோரால் மதிக்கப்பெறுதல் - பாராட்டப்பெறுதல். வீடுபேறு என்று கூறுவதும் ஏற்புடையதே! 31. 32. அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. அறத்தில் சிறந்த ஆக்கமும் இல்லை. அறத்தினை மறத்தலைப் போல வேறு கேடும் இல்லை. 32. 33. ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே செல்லும்வாய் எல்லாம் செயல். தம் ஆற்றலுக்கு இசைந்தவாறு தமக்கு வாய்த்த வாயில்களில் எல்லாம் அறச்செயல்களை இடையீடின்றிச் செய்திடுக. அறச்செயல்கள் செய்தற்குரிய வாயில்கள் அளப்பில. இதுதான் அறம் என்பதன்று; மிகச்சிறிய பணிகள் கூட மற்றவர்க்கு நன்மை பயக்கும் வழி அறமாகும். 1. ஒவ்வொருவரும் தம்வாழ்க்கையை அமைத்துக்கொள்வதன் மூலம் சுற்றுப்புறத்தூய்மையைப் பேணுதல் சிறந்த அறம். 2. தாம் வாழும் நிலைகளில் உழைப்புக்களத்தில், வாழ்க்கைக்களத்தில் மற்றவர்களுக்குரிய பங்களித்து வாழ்தல் அறம். 3. எந்தச் சூழ்நிலையிலும் இனியன கூறுதல், குற்றம் உடையார் மீதும் பகை காட்டாமல் திருத்தம் காண முற்படுதல் அறம். 4. குற்றங்களை மறந்தும் மறைத்தும் குணங்களைப் பாராட்டி வாழ்வித்து வாழ்தல் அறம். 5. தம் வாழ்க்கைக்குத் துணையாய் அமைந்து வளம் தரும் நிலம், தண்ணீர், மரம், விலங்கு முதலியனவற்றை முறையாகப் பாதுகாத்தல் அறம். 6. யாரிடமாவது, யாரைப் பற்றியாவது பேச வேண்டிய இன்றியமையாமை ஏற்படும்பொழுது குணங்களை மட்டுமே எடுத்துக்கூறுதல் அறம். 33. 34. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற. மனத்துக்கண் குற்றமிலராகித் தூய்மையோடு வாழ்தலே அறம். அதுவே அறம், மற்றவையெல்லாம் விளம்பரம். பொறிகளில் புறத்தே தூய்மை காட்டிசில அறச்செயல்களைச் செயல்களைச் செய்தாலும் மனத்தில் தூய்மை இருந்தாலே உரிய பயனைத் தரும். 34. 20 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை