பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 கலைஞன் தியாகம்

பள்ளிக்கூடம் இல்லாத இந்த மெளனங்லையை அவன் வெறுத்தான்். குழங்தைகளுக்கு இந்த விடுமுறை தூக்கத்தைப் போன்ற ஓய்வைக் கொடுத் தது. முனிசாமியோ மரணத்தைப் போன்ற ஓய்வாக எண்ணினன். அவன் வாழ்க்கையில் கிச்சயமாகக் குறிப்பிட்ட காலங்களில் நேரும் கண்டங்கள் அந்த விடுமுறைக் காலங்கள். மற்ற நாட்களெல்லாம் அவனுக்கு வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. அந்த விடுமுறை நாட்களோ மெல்ல மெல்ல அடிமேல் அடி வைத்து அவனேப் பார்த்துப் பார்த்துப் பயமுறுத்திக் கொண்டே சென்றன, -

அந்தக் காலங்களில் வெயில் அதிகம்; அவன் அலேச்சலும் அதிகம். சாயங்காலம் வீட்டுக்கு வரும் போது அவன் உள்ளம் வதங்கி, உடல் வதங்கி வருவான்.

‘எப்படியோ இந்த வருஷம் கோடை விடுமுறை கழிந்துவிடும்; இன்னும் ஒரு வாரங்தான்ே இருக் கிறது? எங்கேயாவது கடன்வாங்கிச் சர்க்கரையும் எள்ளும் கடலேயும் வாங்கி மிட்டாய்களையும் மற்றப் பண்டங்களையும் செய்து வைத்துக்கொள்ளவேண் டும் என்று அவன் கினைத்தான்். பணம் யார் கொடுப் பார்கள்? அவன் மனைவி, தான்் வேலை செய்யும் வீடு களில் ஒரு வீட்டு அம்மாவிடம் இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டு வங்தாள். சர்க்கரை முதலிய சாமான்களே வாங்கிவங்து புதுவருஷ வியாபாரத்துக் காகச் சரக்குகளைத் தயார் செய்யத் தொடங்கின்ை.

குழந்தைக்கு இரண்டு வயசு ஆகிறது. எதைக் கண்டாலும் வாயில் போட்டு மதிப்பிடும் பருவம்.