பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கலைஞன் தியாகம்

'இன்னும் ஒரு வாரம் பார்க்கலாம். வீணுகக் கெட்டுப் போகாதே. இந்தச் சாமி பொல்லாத சாமி.”

'உங்கள் சாமியின் சக்தியைத்தான்் பார்த்து விடலாமே!’ -

'இன்னும் ஒரு வாரத்துக்குள் மாரியாயி உனக்குத் தக்க தண்டனே அளிப்பாள்' என்று ஆத்திரத்தோடு சொல்லிவிட்டுக் கிழவன் போய் விட்டான். அன்று முதல் அவன் மாரியம்மனே நோக்கி விரதம் இருக்கத் தொடங்கின்ை.

- 来 “来 来

ஒருநாள் ஆயிற்று; இரண்டு காட்களாயின. பாதிரி தம் பிரசங்கங்களை நிறுத் த வே யி ல் லே. மாரியம்மனும் தன்னுடைய கோபத்தைக் காட்டிய தாகத் தெரியவில்லை. நிச்சயமாகத் தெய்வம் இவன்த் தண்டிக்கும்” என்று கிழவன் சொல்லிக் கொண்டே இருந்தான்். ஊரினரெல்லோரும் அவனுடைய வார்த்தைகளில் உறுதியான கம்பிக்கை கொண்டிருந்தனர்.

மூன்ருவது நாள் இரவு அந்தக் கிழவன் ஒரு கனக் கண்டானம். அதை அவன் தன் பரிவாரங் க்ளுக்கெல்லாம் கதை கதையாகக் கண்ணில் நீர் ததும்ப எடுத்துச் சொன்னன். 'உன்னுடைய விரதத் திற்குச் சீக்கிரம் பலன் கிடைக்கும். உன் வைராக் கியத்தை நான் மெச்சினேன். உன்னுடைய எதிரியை அடியோடு ஒழித்துவிடுகிறேன்” என்று மாரியாயி தன்னிடம் சொப்பனத்தில் சொன்னுளென்று அந்தக் கிழவன் வருணிக்கும்போது கேட்டவர்களுக் கெல்லாம் மயிர்க்கூச்செறிந்தது.