உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இதழ்கள்

12 இதழ்கள் ‘தானா வரது கழுதை. அதைத் தேடிண்டு எத்தனை வாண்டுகள் வரது...அதுகளோடு எங்கேயாவது கொட்ட மடித்துக் கொண்டிருப்பாள். வரப்போ வரட்டும். வீட்டி லாவது கொஞ்ச நேரம் ரகளை ஒஞ்சிருக்கும்.” 翼 奚 X ஸ்ார், உங்களை யாரோ ஒரு அம்மா தேடி வந்திருக் காங்க.” 'அம்மாவா?” எழுந்து நடந்து அறைக் கதவைத் திறக்கும் அந்த நேரத் துக்குள் மண்டையுள் ஆயிரம் எண்ணங்கள் நீந்தின. "யாராயிருக்கலாம்? தினம் கட்டு நோட்புக்கும் டிபன் டப்பாவையும் மார்போடு அனைத்துக்கொண்டு தன்னுடன் பஸ்ஸுக்குக் காத்திருக்கும் அந்த வாத்தியாரம்மாவா? நேற்று மாலை வழி மறித்து மூஸ்பர்ஜங் பகதூர் தெரு வுக்கு எப்படி போகிறது?’ என்று கேட்டாளே அந்த லேடி”யா? நிஜமாகவே அவன் ஸ்டன்னிங் இல்லை மூணு நாளுக்குமுன், சின்னா இலையில் சுருட்டிக் கொடுத்திருந்த மோர்க்கூழ் பொட்டலத்தை அசதி மறதி யாய் பக்கத்தில் வைத்துக் கொண்டதால், அதன்மேல் உட்கார்ந்து அதைச் சப்பையாக்கிவிட்டு அவசர அவசரமாய் எழுந்து, ஒ! உங்களதா! எக்ஸ்க்யூஸ் மி. ஐ ஆம் ஸாரி - என்று குழல் போன்ற குரலில் தெரிவித்துக் கொண்ட அந்த இரட்டைப் பின்னல்காரியா? அல்லது இம்மாதிரி நினைவில் பத்திரமாய் ரகஸ்யமாய்ச் சேமித்துப் புதைத்த சம்பவங்கள், முகங்கள், மேட்டு வெள்ளை விழிகள், மேல் மிரளும் கருவிழிகள், கன்னங் குழிந்த புன்ன கைகள்-எல்லாம் ஒருங்கே தலைநீட்டி எழுந்தன. குருவுக்குத் தன்னுடைய கவர்ச்சியில் என்றுமே ஒரு அபார நம்பிக்கை. தன் பகற் கனவுகளில் தன்னோடு வளைய வரும் அப்லரஸ்கள் அத்தனை பேரும் அல்லது அத்தனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/12&oldid=1247291" இலிருந்து மீள்விக்கப்பட்டது