உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

இதழ்கள்

182 இதழ்கள் "நீங்கள் சொல்கிற அந்த ஒன்றுதான் என்ன?” ஒரு கையில் பூஜைத் தட்டும், மறு கையில் மடி ஜலமுமாக, மடிக்கட்டுடன் உஷை நிற்கையில், அவள் முகத்தின் ஆர்வம், எல்லோர் மனத்தையும் உருக்கும் தன்மையதாக இருக்கும். அம்மாவின் நெஞ்சைத் தவிர. அம்மா, சொல்லுங்களேன், தெரியாமல் தானே கேட் கிறேன்? நீங்கள் குறிக்கும் அந்த ஒன்றுதான் என்ன?” * "அது அவரவர் புரிந்து கொண்டதற்குத் தக்கபடி, குதயம் o பூத்ததற்குத் தக்கபடி, அவரவர் எண்ணத்துக்குத் தக்கபடி, எண்ணம் கைகூடினதற்குத் தக்கபடி.” குவிந்த இதழ்களுக்குள் மாட்டிக் கொண்ட வண்டுபோல், உஷை மனம் தத்தளிப்பாள். & so. o X X X முன்பின் சோடையில்லாமல், திடீரென இருட்டிக் கொண்டு திடுதிடுவென மழை இறங்கிக் கொட்ட ஆரம்பித்து விட்டது. விரல் பருமனுக்கு இறங்கிக் கொண்டிருக்கும் மழைக் கம்பிகளைப் பார்த்துக் கொண்டு உஷை கட்டிலில் உட்கார்ந் திருந்தாள். கீழே கொள்ளை வேலை அப்படியே கிடந்தது. ஆனால் இன்று ஏனோ அவளுக்கு மனம் இருப்புக் கொள்ள வில்லை, பழையனவும் புதியனவும் எல்லாம் ஒன்று பிசைந்து கொண்டு நெஞ்சில் கும்பிக் கிளறி, ஒரு தினுசான மனஎரிச்சல் கண்டு கொண்டிருந்தது. குரு கேலி பண்ணுவான். 'இன்று 2.ஷைக்கு வெறிதான்; எல்லோரும் பராக்' இன்றைக்கு விடிந்த வேளை சரியாக இல்லை. எழுந்திருக் கும்போதே வேலைக்காரி சொல்லிக் கொள்ளாமல் நின்று விட்டாள். பாலைக் காய்ச்சிக் கீழே இறக்குகையில் கையைச் கட்டுக் கொண்டு பால் கீழே கொட்டிவிட்டது. நாளைக்கு மோருக்கு லாட்டரி எதிரும் புதிருமாய் இரண்டு பேர்தான் என்றாலும் வீடு என்னவோ. காடாக இருந்தது. மாடியிலி ந்து கீழ்வரை பெருக்கி யெடுப்பதற்குள், இடுப்பு ஒடிந்து கிணற்றில் ராட்டினம் விழுந்து விட்டது. இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/182&oldid=1247280" இலிருந்து மீள்விக்கப்பட்டது