உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

79

இதழ்கள் 79

அல்லது அவர்களுடைய விதாணையற்ற துக்கத்தைக் கண்டு தான் சிரித்ததோ? “ஆனால் இந்தச் சிரிப்பைப் போல் இவ்வளவு மதுரமான, அர்த்தம் மிகுந்த தைரியமான ஒலியை, இதுவரை இன்மத் திற்கும் கேட்டதில்லை. ஆளுக்கு, ஆயுளுக்கு ஒரு முறை தான் அசரீரி, வாக்கு, இவற்றைக் கேட்க முடியும், அதுதான் உண்மையான அசரீரி. உண்மையான வாக்கு. சிரிப்பவர் சிரிக்கட்டும். அழுபவர் அழட்டும். இறப்பவர் இறக்கட்டும். இருப்பவர் இருக்கட்டும். நான் இயங்கிக்கொண்டே இருக்கிறேன். இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன். இது என் இயற்கை. என் இயற்கையே என் நியதி. அவள் குமுங்கித் தனக்குள்ளேயே பிசுபிசுத்துப் போனாள். அவள் உடைந்து உள்ளுக்கு அமுங்கிப் போவதைக் கண்டு அவள் மேல் சாய்ந்து அவளைத் தாங்கிக்கொண்டான். 'கண்ணிர் உடைப்பெடுத்துக் கொண்டதும் காவேரி யைக் கண்ட மாதிரி இருக்கிறது. உயிரின் ஊறலுக்கு வேறு எது அடையாளம்? சுவாமி விளக்குக்கூட குளிர்ந்துவிட்டது. கூடத்தில் கும்மிருள் சூழ்ந்திருந்தது. அவனுக்குத் திடீரென்று ஒரே அசதியாக இருந்தது. அவள் பெருமூச்சுடன் எழுந்து விளக் கைப் போட்டாள். பையன் அப்பா மடியில் தூங்கிக் கொண்டிருந்தான். சிந்தனையோடு கலந்த இந்தக் கதையை அவன் எவ்வளவு துரம் கேட்டானோ, புரிந்து கொண்டானோ? பையனைத் தோள்மேல் சார்த்திக்கொண்டு மாடியேறிச் சென்றான். பின்னால் அவள் தொடர்ந்தாள். மாடியேறுவது கஷ்டமாக இருக்கிறது. இனிமேல் ஒரு நாளைக்கு இரு முறை வரைதான் அடக்கிக்கொள்ள வேண்டும்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/79&oldid=1247177" இலிருந்து மீள்விக்கப்பட்டது