70
இதழ்கள்
70 இதழ்கள் 'கடிதங்கள் எழுத்தெல்லாம், நேருக்கு நேர் ஒரு சொல்லுக்கு இணையாமோ? உலகில் இருக்கும் சொல்லெல் லாம் கைக்குக் கை ஒரு பிடிப்புக்கு ஈடாகுமோ? நினைப்பெல்லாம் அவள். அவளினின்று அவள் இல்லா மல் அவனுக்கு விடுதலை இல்லை. 'அஞ்சனா, நீ துரோகி. ஆமாம், நீ துரோகி. ஊருக்கு உன் சாமான்களை யெல்லாம் மூட்டை கட்டிக்கொண்டு போகையில் என்னையும் என்னை அறியாமல், எனக்குக் கொஞ்சங்கூட விட்டு வைக்காமல் எடுத்துக்கொண்டு போய் விட்டாயா? நான் இந்த வீட்டில் மேலுங் கீழுமாய் மயங்கி மயங்கி எதைத் தேடுகிறேன்? என்னையா? உன்னையா? அஞ்சனா, பாவி, போகிற போக்கில் என்னை என்ன பண்ணி விட்டுப் போய்விட்டாய்? 'பிரிவின் ஜன்னியைக் கண்ணனுக்குச் சொல்லும் கதை யோடு இழைக்க முடியுமோ? 'உள்ளுற அவனுடைய சுயபலம் போய்விட்ட மாதிரியே தான் அவனுக்குத் தோன்றிற்று. அவனைப் பிடித்துக்கொண் டிருந்த ஜுரவேகந்தான் அவனைத் தாங்கிக் கொண்டிருந்தது. பிறகு ஒரு நாள் கடிதம் வந்தது. கண்கள் ஆறாய்ப் பெருகின. அத்துடன் அவற்றை அடைத்துக் கொண்டிருந்த அழுக் கெல்லாம் கரைந்தோடிப் பார்வைக்கெல்லாம் பளிச் சென்று பச்சையாய்த் தோன்றின. மலர்கள் இதழ்கள் விரித்தன.
- ரெயிலின் வருகைக்குக் காத்திருக்கும் பரபரப்பு இத்தனை வயசாகியும் விடுவதில்லை. ரெயிலின் வருகையும் புறப்பாடும் எப்போதும் பெரியசின்னங்களாய் விளங்கு கின்றன. ஆடி அசைந்து பெருமூச்சு விட்டுக்கொண்டு மனம் இல்லாது, ஆனால் தன் கடமையின் குறியில் அந்தி நேரத்தில், அது கிளம்புகையிலும், பொல பொலவென விடியும் நேரத்தில் இரவின் இருளிலிருந்து வெளிப்பட்டு அது அதன் பெரும் சரீரத்தைத் தூக்கிக் கொண்டு நுழைவதிலும்-எத்தனை ஆசைகள், ஆசைகளின் முடிவுகள், ஏமாற்றங்கள், நிறைவுகள், எதிர்பாராத திருப்பங்கள்! எல்லாம் ஒன்றோடொன்று