142
இதழ்கள்
#42 இதழ்கள். .ாங்! டாங்! டாங்!!!’ எழுந்து தத்தித் தத்தி நடந்து வாசலறைக்குச் செல் கிறேன். அப்பா ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார். என் அரவம் கேட்டு அவர் தலை நிமிர்ந்து மறுபடியும் குனிகிறது. நிலை வாசற்படிமேல் சாய்ந்தபடி சுவரை நகத்தால் றிேக் கொண்டிருக்கிறேன். ஆப்பா!' அப்பாவ்!”
- அப்போவ்!”
"அப்பா, நீ என்னோடு பேசனும்பா!' அப்பா, என் பக்கம் திரும்புகிறார். அவர் முகம் மலர் கிறது, சரி, வா இங்கே. ஒரு விரலைக் கொக்கி மாதிரி வளைத்துக் கொண்டு கூப்பிடுகிறார். 'என்னை இங்கே வந்து தூக்கிக்கோப்பா!' அப்பாவின் புன்னகை விரிகிறது. எனக்குத் துக்கம் தொண்டையை அடைக்கிறது, "அப்பா. என்னைக் கண்மணியென்று சொல்லப்பா!' அப்பா முகத்தில் ரத்தம் புழுங்குகிறது. அப்பா நல்ல சிவப்பு. அவருக்கு மூச்சுத் திணறுகிறது. நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு எழுந்து தடதடவென வந்து என்னை வாரி அணைத்துக் கொள்கிறார். மூர்க்கமான முத்த மாரி என்மேல் பெய்கிறது. 'என் கண்மணியே! என் ராஜா என் செல்வமே, என் தவமே!” அவர் தொண்டை கம்மி, வார்த்தைகள் குழறு கின்றன. அவர் கழுத்தை இறுகக் கட்டிக் கொள்கிறேன். அப்பாடி! எவ்வளவு இதமாயிருக்கிறது! 'அப்பா, நீ எனக்குக் கொடுத்தியே, நான் உனக்கு முத்தா.கொடுக்கிறேன்!” ஆனால் என் உதடுகளின் முத்திரை அவர் கன்னத்தில் அழுந்துவதற்குள் திடீரென என்னைத் துாக்கம் கவ்வுகிறது. அவர் தோள்மேல் என் தலை துவண்டு சாய்கிறது, Ž X &