96
இதழ்கள்
96 இதழ்கள் 'அதெல்லாம் அப்படி ஒண்ணுமில்லே. உலகத்திலே குத்தம் குறையேயில்லாமே ஒத்தரும் பிறந்துடலே. நான் தான் வயசுத் தள்ளாமை காலத்துலே கோபத்திலோ ஆத்தி ரத்திலோ மனசு புண்படப் பேசியிருப்பேன்; அதெல்லாம் நீ மனசுலே வெச்சுக்கப்படாது.” பாகிக்கு நெஞ்சை யடைத்தது. அப்படியே மாமியாரின் முழங்கால்களைக் கட்டிக் கொண்டாள். "அப்படியெல்லாம் பேசாதேங்கோம்மா.” ஆனால் கிழவி அப்படித்தான் பேசிக்கொண்டு போனாள். வெறி பிடித்ததுபோல் அவள் பார்வை முற்றத்து வெட்ட வெளியில் நிலைத்தது. 'எனக்கெல்லாம் வயசாயிடுத்து. என்னை ஒத்தரும் திருத்த முடியாது. நான் இனிமேல் திருந்துவதாகவும் உத்தேசமில்லை.” பாகீரதியின் கண்கள் திகிலில் சுழன்றன. 'நான் ஒண்னும் சொல்லல்லையேம்மா-” கிழவி தன் எண்ணங்களிலிருந்து மீண்டாள். அவள் பார்வை மருமகள் மேல் குனிகையில் கனிந்தது! “அட அசடே! நான் உன்னை ஒண்ணும் சொல்லல்லே.” 'ஜட்கா வண்டிக்காரன் ஒரு நாழியாகக் காத்துக்கொண் டிருக்கிறான் என்று நான் விண்ணப்பம் பண்ணிக்கலாமா?” 'இதோ வந்துட்டேனே.” 'பாகீ, இதுவரை எண்ணிண்டுதான் இருக்கேன்; நாலு தடவை "இதோ வந்துTட்டேன்’னு சொல்லியாச்சு, இன்னும் இடத்தை விட்டு நகர்ந்தபாடில்லை.” “உங்கள் மாதிரி எல்லாத்தையுமே முள்ளு முனையிலே வெச்சு காரியத்தை நடத்த முடியுமா எங்களாலே?" 'உன்னாலேன்னு சொல்லு, எல்லாப் பொம்மனாட்டி களையும் ஏன் உன் லெட்டிலே சேத்துக்கறே? உன்னைவிடத் துள்ளிண்டு துடியாயிருக்கறவாயில்லையா?” "சரி; என்னாலேன்னு சொல்லிப்பிடேறன். அட ராமா, தொட்டத்துக்கெல்லாம் இந்தத் தர்க்கத்தைச் சொல்லுபடி போகல்லே!’