உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

33

இதழ்கள் 33
  • அடக் கடவுளே! நான் என்ன செய்வேன்? ஏன், ஏன், ராஜீ மறுபடியும் மடிசஞ்சி மாமி ஆயிட்டையா? சோம வாரம், செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, குருவாரம், சனி வாரம், ஞாயிற்றுக்கிழமை உப்பில்லாமே, கண்டபடி பட்டினி கிடந்து, வேளா வேளைக்குச் சாப்பிடாமல் உடம் பைக் கெடுத்துண்டுட்டு, அப்புறம் ஆளை ஆளாய்த் தேத்தற பாடு உன்பாடு என்பாடுன்னு வருஷம் ஒண்ணாச்சு. ராஜி, உனக்கு உன்மேல் இரக்கம் இல்லாட்டாப் போறது, என் மேலாவது கொஞ்சம் வையேன்! கை கூப்பலில் விரல்கள் ஒன்றுடன் ஒன்று கோத்துக் கொண்டன.

அவள் முகம் கொஞ்சங்கூட மாறவில்லை. ஒரு தினுசான அசதியான, ஆனால் அழுத்தமான பொறுமையுடன் அவன் கைவிரல்களைப் பிரித்துவிட்டாள். சரி கிளம்புங்கோ நேரமாச்சு-” எங்கே?’’ கோயிலுக்கு. இன்னிக்கு கிருத்திகை. கூட வெள்ளிக் கிழமையும் சேர்ந்திருக்கு, ரொம்ப விசேஷம். மஹா புண்ணி யம்.’’ 'எனக்குப் புண்ணியம் வேண்டாம்.” “பயத்தம் கஞ்சி வேணுமா வேண்டாமா? சட்டென அவன் குதித்தெழுந்தான், இந்தத் தடவை உனக்கு மண்டை வரைக்கும் ஏறிடுத்துன்னு நினைக்கிறேன். நீ வேணுமானால் போய்க்கோ. நான் ஹோட்டலுக்குப் போய் மூக்கைப்பிடிக்க இழுக்கப்போறேன். மனுஷனுக்கு வீட்டுக்கு வந்தால், வீடு வீடாயிருக்கணும். வீட்டையே கோவிலாக்கிக் கொண்டிருந்தால், பேசாமல் கோவிலிலேயே குடித்தனமிருக்கலாமே! வாடகையாவது மிக்சப்படும். வெளிப் பிரகாரத்தில் படுக்கையை விரிச்சுப் போட்டுட்டு வேளா வேளைக்குப் பிரசாதம் உண்டைக்கட்டி, பம்-டம் மஹதேவ்-' - - பூவின்மேல் பணித்துளி நிற்பதுபோல் அவள் விழிகளில் நிறைந்தன. அவன் கோபம் பொங்கிய வேகத்தில் கலைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/33&oldid=1247312" இலிருந்து மீள்விக்கப்பட்டது