முன் பின் குறள்களின் இயைபு பற்றி மணக்குடவர், பரிமேலழகர் இவ்விருவரும் கொண்ட முறையினின்றும், ஈண்டு அவற்றின் முறை சிறிது வேறுபடும் என்று காரணம் கற்பிக்கின்றார். மணக்குடவர், பரிமேலழகரை சாஸ்திரி பின்பற்றட்டும், ஆனால் பிறகு ஏன் அவற்றினின்றும் தனது உரை முறை சிறிது தனது உரை முறை சிறிது வேறுபடும் என்கிறார் ? இதுதான் ஆரியத்தின் அரிச்சுவடி திருக்குறளில் வரும் சில சொற்களுக்கு மணக்குடவரும், பரிமேலழகரும் அவரவர் ஆய்வுரை களைத் திருவள்ளுவர் பெருமானது அடிப்படை கருத்துக்களுக்கு மாறாமல் எழுதினார்களே தவிர, பிறழ்ந்து, சிதைந்து எழுதவில்லை.
- ణా இறிந் πε: 痺
என்ற மேற்கண்ட கருத்துக்களை மணக்குடவரோ, பரிமேலழகரோ, வேறு எந்த உரையாளர்களோ வாசகர்கள் மீது அடித்துத் திணித்து மூளைச் சலவை செய்யவில்லை என்பதே உண்மை. ஆனால் சாஸ்திரி, திருக்குறள், அதே அதிகாரத்தில் வரும் 10ஆவது குறளான 30வது குறளில் அந்தணர் என்போர் அறவோர் என்ற குறளை, தனது பாலருரையில் 9-வது குறளாக இடம் மாற்றி வைத்து 8,10 ஆவது திருக்குறள் வரும் அதே இடத்தில், 4-ஆவது பாடலான "உர்னென்னும் நோட்டியான்" எனும் பாடலை, தனது நீத்தார் பெருமை அதிகார உரையின் இறுதியிலே வைத்து முடித்துள்ளார். என்ன காரணம் இதற்கு ? இந்திரனே அந்தணர் அவரே உயர்ந்தவர் மற்றவரால் செய்ய முடியாதவற்றை எல்லாம் இந்திரனே செய்வார் ; அவர் கோபத்தின் பயனை யாராலும் தடுக்க முடியாது என்ற அரும் பண்புகளை, பெருமைகளை இந்திரன் மேலே வலிய ஏற்றித் திணித்து அவரை அந்தணர் என்பதை உலகில் நிலை நாட்டிட அரும் பாடுபட்டுள்ள உரை வித்தகராகக் காட்சி தருகிறார் சாஸ்திரி சாஸ்திரி கூற்றுப்படி இந்திரன் அந்தணர்தானா? மற்ற எந்த உயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுபவரா இந்திரன்? குணநலனே சான்றோர் நலம் என்ற பண்பு நலமுடையவரா இந்திரன் ? சான்றோர்களுக்குரிய அற ஆழி: அன்பு ஆழி அருள் ஆழி, அறிவு ஆழி இவற்றுள் எந்த ஆழியை வென்றவர் இந்திரன் ? என்பதை அந்த பார்ப்பன உரையாசிரியர் சாஸ்திரி விளக்கி இருக்க வேண்டாமா? இது உரையாசிரியரின் இன்றியமையா கடமை அல்லவா ? இந்த அகல் விசும்பளார் வேந்தனான இந்திரனா மற்றவர்களால் செய்ய முடியாதவற்றை எல்லாம் செய்யும் தகுதியுடையவன் ? சாஸ்திரி ஏன் இப்படிப் பட்டவனுக்கு வாதாட வக்காலத்து வாங்குகிறார்? இந்திரன் கோபத்தை யாராலும் தடுக்க முடியாது என்று கூறும் பார்ப்பனப் அரிபுக்AW. 21 பம்மாத்துத் தனம் யாரை ஏமாற்றிட ? கல்வியறிவற்ற மக்களை நம்ப வைக்கவா ? அகத்திய முனிவர் பன்னிரண்டு ஆண்டுகளில் முடியக்கூடிய வேள்விகளைத் தொடங்க, அப்போது இந்திரன் மழையைப் பெய்யாதிருக்கும் படித் தடுக்க தம்முடைய தவத்தின் ஆற்றலால் தானே இந்திரன் ஆகின்றேன் என்று அவர் சொல்ல, இந்திரன் மற்ற தேவர்களோ ஓடோடி நேரில் வந்து மழையைப் பொழிய வைத்து வேள்வியை நடத்தினான். எனவே இதுவரை நாம் சிந்தித்தவற்றும் இந்திரன் என்ற சொல்லுக்குரிய ஆய்வுகளைக் கண்டோம் ஆனால் இந்திரன் என்பவன் அகல் விசும்புளார் கோமானா ? அல்லது. அகத்திய முனிவரால் சாபம் பெற்றுப் பூலோக பூமியில் பாம்பாக விழுந்த நகுவடின் என்ற தற்கால இந்திரப் பதவி பெற்ற இந்திரனா ? எவன் உண்மையான இந்திரன். வேதங்களில் சொல்லப்பட்டு அகலிகை மீது ஆசைப்பட்டுக் கெளதம முனிவர் சாபத்தால் யோனிக் கண்களைப் பெற்ற இந்திரனா ? திருவிளையாடல் புராணத்தில் வரும் இந்திரனா மணிமேகலைக் காப்பியத்தில் கூறப்படும் இந்திர விழா நாயகனா ? நாவலர் நெடுஞ்செழியன் தனது திருக்குறள் தெளிவுரையில் விளக்கமளித்துள்ள இந்திரன் அதாவது இனிய திறமிக்க அறிவன் என்ற புலனடக்கம் பெற்ற சான்றாண்மையாளனா ? அகலிகை, இந்திரன் பற்றிய பழங் கதைகள், திருக்கோவில் சுவர்களில் எழுதப்பட்டிருந்த செய்தி பரிபாடல் என்ற சங்க கால இலக்கியத்தில் உள்ளதே அந்த இந்திரனா ? எனவே, ஒவ்வொரு இந்திரன் உருவமும் அவரவர் மதக் கண்ணாடியின் பார்வைக்கேற்பவே புலப்படுகின்றது கற்பனையாக எழுதப்பட்ட புராணங்களிலே பல பொய்ப் புனைவுகள் உருவாவது மிகச் சாதாரணமானது தானே! திருவள்ளுவர் ஆரியர்களது வேத புராணங்களிலே கூறப்படுகின்ற இந்திரன் போன்ற சில சொற்களை உலகப் பொதுமறையான திருக்குறளிலே ஆட்சி செய்துள்ளார் என்றால், அந்தப் பெயருடையவன் குணக்கேடுகளை, பண்பற்றச் செயல்களை சம்பவங்களை மக்களுக்கும் சுட்டி காட்டி, அவை தமிழர் பண்பாடுகளல்ல நாகரீகமல்ல என்பதை மறந்து, தமிழ்ச் சான்றோர்களின் உண்மையான நாகரீகம் பண்பாடுகளை, நீத்தார் பெருமைகளை நிலை நாட்டிடவே இத்தகைய சில சொற்களை உலகப் பொதுமறையால் திருக்குறளிலே ஆட்சி செய்துள்ளார். என்பது என் போன்றவனின் எண்ணமாகும்? - இந்தக் கட்டுரையில் இந்திரன் என்பவன் எத்தகைய குணக்கேடன் : விபச்சாரன் ; ஒழுங்கீனன் , அறமறியா அற்பன் ; அயோக்கியன் காமக் கேடன் என்பனவற்றைக் கண்டோம இப்படிப்பட்ட ஓர் சமூக விரோதியையா அய்யன் திருவள்ளுவன் நீத்தார் பெருமைக்கு இலக்கணம் ஆக்கி இருப்பார் ? சிந்தனை செய்க ! કઠ ઉUAUછે 2006