உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

137

இதழ்கள் 13?

உருவங்களையும் நீட்டி அழித்துச் சலிக்கா9ல் மலுபடியும் இழைக்கின்றன. பார்த்த முகங்கள், பாராத முகங்கள். இவ்வேழு மாதங்களுள் நான் எவ்வளவு முகங்கள் பார்த் திருக்க முடியும்? ஆனால் இவ்வேழு மாதங்களுள் நேர்ந்த முகங்கள் அல்ல இவை. ஏழாயிர வருடங்களின் முகங்கள். பின்னால் கையைக் கட்டிக்கொண்டு அப்பா உள்ளே வருகிறார். 'என்ன, இன்னிக்காவது வேளைக்கு அகப்படுமா? இல்லை, இன்னிக்கும் எங்கள் மாமனார் வீட்டில்தானா?” "என்னைக் கேட்டால்? இதோ, இதைக் கேளுங்கோ: இதுக்கு இப்பவே வேடிக்கை, எக்சிபிஷன் எல்லாம் வேண்டி யிருக்கிறது. குடியேண்டா, எனக்குக் கொள்ளை வேலை கிடக்கு குண்டு பெருச்சாளி, கன்கு முஷ்கு!” சந்தோஷத்தில் அம்மா பட்டட்'டெண் என் சின் புறத்தில் பின்புறம் அறைகிறாள். அப்பா கிட்ட வந்து குனிந்து என்னை நோக்குகிறார். “என்ன பூர்மதி! இதுக்கு என்ன, மூக்கு முழி கால் கையென்று புரியுமா? இது என்னவோ பூசணிக்காய் மேல் எழுதினாற்போல்-' 'சரி தான் போங்கோ, இந்த இடத்தைவிட்டு அம்மா சீறி விழுந்து அவசரமாய் என் மேல் மேலாக்கைப் போர்த்தி, என்னை இன்னும் இறுக அணைத்துக்கொள்கிறாள். 'உங்கள் கண் ஒண்ணே போறும்போல் இருக்கே!” மறுபடியும் துணியைத் தள்ளிவிட்டுச் சுற்றுமுற்றும் பார்க்கிறேன். சுவர்களில் நிழல்கள் வெறிக் கூத்தாடு கின்றன; என்மேல் அம்மா குனிகிறாள். அவள் மூக்குத்திiல் நட்சத்திரங்கள் சுடர் விடுகின்றன. இம் முகம்-இந்த ஒரு முகம் மாத்திரம் எனக்கு இப் போது ஏழு மாதங்களானாலும், இதற்கு முந்திய ஏழாயிர வருடங்களாய்த் தெரிந்த முகம்-என்றும் மறவாத முகம். அம்மா! 9 سس(g

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/137&oldid=1247235" இலிருந்து மீள்விக்கப்பட்டது