இதழ்கள்
125
இதழ்கள் 125
கொண்டு, கண்களில் கொடுரம் கொதிக்க ஒன்றையொன்று சீறிக் கொண்டு உக்கிரமாய்ப் படத்தைத் தரையில் அடித்து அடித்து விஷத்தைக் கக்குகின்றன. இரண்டு விஷமும் ஒன்று கலந்து திரண்டு-என்ன ஆச்சரியம். ஒரு பூ உருவாகிறது: யானைக்காது போல் பெரிய கறுத்த இதழ்கள், பச்சைக் காம்பி லிருந்து விரிகின்றன. பூவின் நடுவில் செக்கச்செவேல் என்று ஒரு இரத்தத் தண்டு கிளம்புகிறது. அதிலிருந்து சொரியும் இரத்தத் துளிகள் பூவின் இதழ்கள் மேலும் தரை மேலேயும் சிந்துகின்றன. சிந்திய இடத்தில் ஒவ்வொரு கண் சிமிட்டிக் கொண்டே திறக்கிறது. கரிப்பு! வீல் என்று அலறிக் கொண்டெழுந்தாள். பொழுது நன்கு சாய்ந்து, மரங்களின் நிழல்கள் நீள ஆரம்பித்து விட்டன. தலைக்கு நேர் வானத்தில் ஒரு கிளிக் கூட்டம் பறந்தது. புஷ்பங்களை ஆகாயத்தில் துவினாற்போல். நாமும் ஏன் அது மாதிரி காற்றில் மிதந்து போக முடிகிறதில்லை. சரி சரீ, இப்படி யோசனை பண்ணிண்டிருந்தால், இன்னி முக்கப் பணிணிண்டிருக்கலாம். வேலையோ முழி பிதுங்கிக் காத்துக் கிடக்கு, நாளைக்கு வெள்ளிக்கிழமை. நமக்கேது வெள்ளிக் கிழமை? வேலைக்குத்தான் வெள்ளிக்கிழமை. வெள்ளிக் கிழமை பண்ணியாகனும். போறும் போறாததற்கு வேறே"நனைச்சு வெச்சிருக்கு’! நான் ஏதாவது வேண்டாம்னு சோல் லிடுவேனோன்னு அவரே பண்ணிவிடற காசியங்களில் அது சேர்த்தி. ஆமாம், யாருக்கு என்ன வேண்டியில்லை? பண்டம் கெட் டுப்போனால் பத்து நிமிஷம், மனுஷா தவறினால் பத்துதான். அவ்வளவுதானே? இன்னிக்குச் சாப்பிடலாமா, வேண்டாகவா? இன்னின் கென்னவோ அதான் மலைப்பாயிருக்கு. வேண்டிபு:வில்லை. சரி, ஒரு நாள் சாப்பிடாட்டால்தான் என்ன? உஇல் போயி டாது. அட அப்படிப் போற உசிர் போகட்டுகே!