உணர்ச்சி
25
தீய எண்ணங்களுக்கு ஒருபொழுதும் இடங்கொடாதே. எப்பொழுதாவது சிறிதேனும் இடங்கொடுத்து விட்டால் பின் தடுமாற்றமின்றி நன்மையை நாடுதல் கஷ்டமாய்விடும்.
13
மனிதர் ஏகாந்தமாயிருக்க விரும்பிக் கடற்கரைக்கும் மலைகளுக்கும் போகின்றனர். ஆனால் இது வெகு சாதாரணமான மனிதர் செயல். ஏனெனில் எவனும் விரும்பினால் தன்னுள்ளேயே ஏகாந்தமாயிருக்க முடியும். சாந்தி தரக்கூடிய எண்ணங்களைச் சிந்தையில் எழவிட்டால் அவ்வளவு அமைதியும் தனிமையும் வேறெங்கும் காண முடியாது; சாந்தி என்பது அந்தக் கரணத்தின் சீர்பாடேயன்றி வேறன்று என்பேன். ஆகையால் நீ இத்தகைய தனியிடத்திற்கே அடிக்கடி சென்று உன் வாழ்வைப் புதுப்பித்துக்கொள்.
14
நீ உன் வாழ்க்கைக்குக் கட்டளைக் கல்லாக வைத்துக் கொண்டிருக்கிற தத்துவங்கள் சிலவாயும் மூலாதாரத் தத்துவங்களாயும் இருக்கட்டும். எங்ஙனமெனின், உனக்கு ஒரு விஷயம் அதிருப்தியை உண்டாக்குகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீ உன் தத்துவங்களைத் தியானித்த மாத்திரத்தில் உன் அறிவு நிர்மலமாகிச் சற்று நேரத்திற்கு முன் உனக்கு அதிருப்தியை உண்டாக்கின. பொருள்களி னிடத்து மலர்ச்சியோடு உன்னைச் செலுத்தவேண்டும். மனிதருடைய தீமையைக் கண்டு உன் மனது சஞ்சலமடைகிறதா? அப்பொழுது மனிதர் பரஸ்பர உதவிக்காகவேதான் ஜீவிக்கிறார்கள் என்றும், பொறுமையில்லாதவர் நீதிமான்களாயிருக்க