புலவர் என்.வி. கலைமணி 壟茲 படைக்கிறேன். இல்லாவிட்டால், அவர் பாம்பு கடித்துச் சாவார். அந்த பிணத்தையாவது உங் களிடம் ஒப்படைக்கிறேன்' என்று நிபுணர் கூறினார்.
'பாம்பா” என்றார்கள், அங்கிருந்த அனைவரும் - வியப்புடன்!
ஆமாம், குற்றவாளியைப் பாம்பை விட்டே துப்பறிவேன்! பாம்பு அவரைப் பிடிக்காது. கடிக்கும்! பிணம் மட்டும் நம்மிடம் கிடைக்கும். என்றார் நிபுணர். எல்லாரும் ஒருவரை ஒருவர் பய்ங் கரமாகவும், கவலையாகவும் பார்த்தபடியே வெளியேறினார்கள். துப்பறியும் நிபுணர் மட்டும் பிணத்தருகே நின்று கொண்டிருந்தார்.
'பாம்பு கடிக்கும் என்று நிபுணர் கூறியதைக் கேட்ட முதலாமவர், தனது வீடு வாசல் அனைத்தையும் யாரும் அறியாதபடி வேலைக் காரர்களை விட்டுத் துப்புரவு செய்து கொண்டார். எல்லா சாளரங்களையும், கதவுகளையும் எப் போதும் மூடிவைக்கும்படியே தனது வேலைக் காரர்களுக்கு உத்திரவிட்டார்.
இரவெல்லாம், எல்லா விளக்குகளும் எரிந்தபடியே இருக்க வேண்டுமென்று எல்லா பணியாளர்களுக்கும் கடுமையாகக் கட்டளையிட்டார்.
பங்களாவின் தலைவாசலில் இருந்து கடைவாயில் வரைக் காவலிருக்கக் காவலர்களை அதிகமாக நியமித்தார் அவர்.
இவ்வளவு அச்சக் குறிப்புகளும் அவர் ஒருவருக்கே புரியுமாறு, அததற்குரிய காரணங்களையும் வேலைக்காரர்களிடம் கூறினார்.