பக்கம்:குக்கூ.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழுத்துக்களில் கல்லும் மண்ணும் தூசியும் தும்பும். ஒரு தாயின் பரிவோடு அவற்றைக் கைபார்த்து, நூலாக வடித்து இலக்கிய விருந்திட்டார் அவர். அதுவும் அன்னம், அகரத்தின் பொறுப்பில்.

மீராவினால் நூலாசிரியர்களாய் அறிமுகம் ஆன புதுமுகங்கள் பலர் இன்று புகழ்முகங்கள். அந்த நட்சத்திர எழுத்தாளர்கள் இல்லாது வார இதழ்கள் வரும் நாள் விடியாது என்பது மகிழத்தக்க நிலை. மீரா புகழ்வாய்ந்த பெரும் படைப்பாளிகளின் நூல்களையும் பதிப்பித்தார். கவிஞர்களில் அப்துல் ரகுமான், அபி, சிற்பி, புவியரசு, முருகுசுந்தரம், மேத்தா என்று வளரும் பட்டியல். கதைகளில் சின்னப்பபாரதி, ராஜநாராயணன், பிரபஞ்சன், கந்தர்வன், மாலன், க. வை. பழனிசாமி, என்று தொடரும். திறனாய்வாளர்களில் பாலா, தோதாத்ரி, நுஃமான், வல்லிக்கண்ணன், வெங்கட்சாமிநாதன், இந்திரன் போன்று.

பிற பதிப்பாளர்கள் வெளியிடத் தயங்குகிற நூல்களையும் வெளியிட்டார் மீரா. மார்க்சிய உள்ளோட்டமுள்ள நூல்கள் பொது விற்பனையில் ஓடாது. தேங்கும். ஆனாலும் துணிந்து செயல்பட்டார் மீரா. கரிசல் காட்டுக் கதைகள் சிலவற்றில் நாட்டுச் சதை மணக்கும். தமிழர் அப்படி எதிர்கொள்வார்களோஎன்கிற நிலையிலும் மீரா அவற்றை அச்சுப்படுத்தினார். நம் நாட்டார் இலக்கியத்தில் அரியதோர் பகுதியை அனைவரும் சுவைக்கச் செய்தார்.


மீராவின் பதிப்புலகம் விரிவானது.

கவிதைகளில் முதற்பூக்கள், சாதனை மலர்கள், சோதனையான ஒட்டு ரோஜாக்கள், கதைகளில் புதிது, பழசின் மறுபதிப்பு, மண் மணக்கும் நாட்டார் இலக்கியம் மொழி பெயர்ப்பு.


உரைநடையில் கலை, கலைத்திறனாய்வு, முன்னோட்டம் போலமைந்தவை, சிறப்பு அறிவியல் என

83
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/84&oldid=1233986" இலிருந்து மீள்விக்கப்பட்டது