பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோதலுண்டு தோல்வியுறுவதும் துன்பியலாக முடியும் என்பதல்ல. அவை துன்பியலாக அமையவே முடியாது. ஆனால் வளர்ந்து விட்ட புதிய சக்திகளின் முக்கியத்துவத்தை உணராது பழமையின் பிரதிநிதியாக இருந்து அதனை உளப் பூர்வமாக நியாயமாகக் கருதிக் காப்பாற்ற முயன்று தோல்வியுறும் அவலம் துன்பியலாக அமையலாம். இதனை 'வரலாற்றுப்பிழை (Historical Error) arcirluti GuJT£T«it LoTitjoiv (Introduction to the contribution to the critique of Hegel's philosophy of law) @sitainm gleiristudi @(56.1amélo Lull-gtsäpä. (See Tatayana Lyupimova's article in contemporary Aesthetics Moscow, 1984) 1) புதிய வளர்ச்சியைக் கணக்கிலெடுக்காத பழமையின் செயற் பாடுகள் துன்பியலில் முடியலாம். எடுத்துக்காட்டு, ஷேக்ஸ்பியரின் லியர்மன்னன். 2) பழமை வலுவாக உள்ள போது அதன் மதிப்பீடுகளுக்கெதிரான புதுமையின் சமூக நடவடிக்கைகள் தோல்வியில் முடியலாம். இது துன்பியலில் முடியும். அடித்தட்டு மக்கள் எப்போதும் வளர்ந்து வரும் புதிய சக்திகளுக்குச் சார்பானவர்களாகவே இருப்பதன் விளைவாக அவர்களின் இலக்கிய வெளிப்பாடாகிய கதைப் பாடல்கள் (முக்கியமாகச் சமூகக் கதைப் பாடல்கள்) இந்த வகைப் பட்டதாகவே அமைந்துள்ளன. மொத்தத்தில் வரலாற்றின் நெருக்கடியான சந்தர்ப்பங்களின் முரண்பாடுகளையும், மோதலையும், சமூக அழுத்தத்தையும் அழகியலாக வடித்தெடுப்பதே துன்பியல் என்பதில் ஐயமில்லை. இந்த நோக்கில் தான் துன்பியலின் பாடுபொருள் வரலாறே என்பர். மனித வாழ்க்கையின் மேன்மையும் அதன் உன்னதங்களை எட்டு வதற்கான தியாகத்தின் உயர்வும் எக்காலத்திலும் இவற்றின் சாரமா கின்றன. அதனால்தான் ஒரு கால கட்டத்தியத்தின் துன்பியல் இலக்கியங்கள் இன்னொரு காலகட்டத்திலும், மனித மனத்தைத் தொடுவதாக அமைகின்றன. நாட்டார் கதைப் பாடல்கள் அனைத்தும் 16, 17, 18-ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என்கிற முடிவுக்கு ஆராய்ச்சியாளர் கள் வந்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில்தான் இங்கு நிலவுடமை உற்பத்தி முறை காலனிய - நிலவுடமை உற்பத்தி முறையாக 109