பக்கம்:குக்கூ.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்திரிப்பதன் மூலமே வாழ்வின் விசித்திரத்தைக் கூறிவிடும் பண்பு உண்டு.


இஸ்லா போன்ற கவிஞர்கள் இதில் வல்லவர்கள். மீராவுக்கும் இத்தகைய பார்வை வாய்த்திருக்கிறது.


கோழியும் சேவலும்
குப்பையைக் கிளறும்
விடியற் காலையில்
கண் முடிக் கிடக்கும்
ஊர்நாய் ஒரு மூலையில்
இரவெல்லாம் குரைத்த அசதியில்

என்ற கவிதையில் இதைப் பார்க்கலாம்.


இதைப் போன்றே அடுத்த வீட்டில் பால் குடித்து விட்டுத் தன் வீட்டு மாடியில் வந்து படுக்கும் பூனை (21), தன் கல்லறையைச் சுற்றி வரும் வளர்ப்பு நாய் (47), செம்மறி முதுகில் சவாரி செய்யும் சுகத்தை அனுபவிக்கும் கரிச்சான் குருவி (53) ஆகியவற்றைச் சித்திரிக்கும் போதும் 'குக்கூ'வில் ஹைகூவின் மணம் வீசுகிறது.


இதுதான் வேலை
மல்லாந்து படுத்து
இதுதான் வேலை
மல்லாந்து படுத்து
சிகரெட் புகையை
புதிய சிமெண்ட் ஆலை

என்ற கவிதையில் ஹைகூவுக்கே உரிய படிமக் காட்சி அமைந்திருக்கிறது. ஆனால் ஹைகூவில் இல்லாத 'நவீனத்துவம் இந்தப் படிமத்தில் இருக்கிறது.


திசையெங்கும்
இருள் திரைகள்....
வைகறை வந்தது;
கம்பீரமாய்க்
கண் விழித்துப் பாய்கின்றன
கதிர்க்குதிரைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/8&oldid=1234018" இலிருந்து மீள்விக்கப்பட்டது