இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நெடுங் கவிதை
❖
மெளன மயக்கங்கள்
❖
சிற்பி
அன்று
சட்டமன்றத்தில் தேவதாசித் தடைச்சட்டம் வந்தபோது ஒநாய்கள் அழுதன. ஆடுகள் நனையப் போகின்றனவே என்று!
ஆண் சாதியின் ஆசை அளவுக்கு அதிகமாகும்போது அதற்கொரு வடிகால் வேண்டாமா? அந்த அளவுக்கு அதிகமான ஆசையை எதிர்கொள்ளவென்று ஒரு பகுதிப் பெண்கள் இல்லையென்றால் சமூகம் என்ன ஆவது? அது குடும்பப் பெண்கள் மீதல்லவா பாயும்? மொத்தச் சமூகம்
95