வேண்டிய பணிகளைச் செம்மையாக ஆற்றுவதன் மூலமும் புரட்சி என்னும் ராஜபாட்டைக்கான மகத்தான ஆரம்பத்தை ஆரம்பிக்கலாம் என்று அழுத்தமாகக் குறிப்பிடுகின்றார். இக்கருத்தை 'புதிய மனிதன்' 'மறுபடி வருவார்கள்...” என்ற கதைகள் உணர்த்துகின்றன.
'மறுபடி வருவார்கள்' என்னும் கதையில் வரும் தோழர் தன்னாசி மறக்கமுடியாத பாத்திரம். குற்றுயிரும் குலை யுயிருமாகச் சிறையிலிருந்து விடுதலையாகி வரும் தோழர் தன்னாசி, தோழர் சேகரன் வீட்டில் தங்கியிருக்கும்போது நடந்துகொள்ளும் பாங்கு, தோழமை உணர்ச்சி, சீர்மை அனைத்தும் நெஞ்சைத் தொட்டுவிடும் சித்திரிப்புக்கள். சின்னச் சின்னச் செங்கல்களின் அடுக்குத் தான் கோபுரம்; சின்னச் சின்ன வேலை முறைகளும் ஒழுங்கமைவுகளும் தான் பெரியதோர் மாறுதலுக்கு வித்துக்கள்; தோழமை உணர்ச்சிக்கு உரிமை கொண்ட கம்யூனிஸ்ட்கள்தான் இவற்றைச் செய்ய வேண்டும், இவர்கள் இல்லையெனில் வேறு யார் செய்ய முடியும் ? என்று சொல்லாமல் சொல்கின்ற நேர்த்தியைக் கதையைப் படிக்கும் யாரும் பாராட்ட முடியும்.
எனினும் "புதிய மனிதன்' கதையில் புலப்படும் இன்னொரு குறிப்பை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கெனவே இங்கு பணிபுரியும் இடதுசாரி அணிகளிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொண்டு ஒரு 'புதிய மனிதன்' வருகிறான்; வந்து தனது அரசியல் நடவடிக்கையை முடித்துக் காட்டுகிறான் என்று பேசுகிறது அக்கதை, சட்டமன்ற, பாராளுமன்றங்களின் ஜனநாயக அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு, தேர்தலில் பங்கு பெற்று அதன்மூலம் மக்களை அணுகுதல் என்ற நிலை பாட்டில் இரண்டு பொதுவுடைமைக் கட்சிகள் இங்கே
102