பக்கம்:பாரதித் தமிழ்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெலுங்க மஹா சபை

சக்திதாஸன்

9 g్మకాsir 1917 பிங்கள வைகாசி 27

சென்ற வெள்ளிக்கிழமை (ஜூன் 1) யன்று நெல்லூரில் கூடிய ஆந்திர மஹாசபையில் சபா நாயகர் பூரீ வெங்கடப்பய்ய பந்துலு செய்த உபந் யாஸம் கவனிக்கத்தக்கது. ராஜநீதி சாஸ்த்திரத்தில் தெலுங்கர் நெடுங்காலத்துப் பெருமையுடையார். பாடலிபுத்ர நகரத்தில் நடந்த ஆந்திர ராஜ்யமும் பிற்காலத்தில் தமிழ் நாட்டைக் கட்டியாண்ட விஜயநகரத்து ராஜ்யமும் கீர்த்தி மிகுந்தனவன்றாே? தெலுங்கர் தமிழரை ஆண்ட அடையாளங்கள் நமது பாஷையிலும் ஆகாராதிகளிலும் அழிக்க முடி யாதபடி பதிந்து கிடக்கின்றன. தமது ஸங்கீதமும் நாட்டியமும் தெலுங்கிலேயே இன்றுவரை முழுகிக் கிடக்கின்றன. பாடகர்கள் பாடும் கீர்த்தனங்களில். உயர்தர மெல்லாம் தெலுங்குக் கீர்த்தனங்கள். தாசிகள் ஆட்டத்தில்பாடும் வர்ணங்கள் ஜாவளிகள் முதலியவற்றில் நல்ல உருப்படியெல்லாம் தெலுங்கு. நமது கிராமங்களிலுள்ள தெலுங்க ரெட்டிகளும், நாயுடுமாரும், ஆந்த்ரபிராமணப் புரோகிதர்களும், தெலுங்க தாசிகளும் ராயர் சம்ஸ்தான காலத்தில் இங்கே உறுதி பெற்றவர்கள். நமது விவாக காலங் களில், பாடும் பத்யம், லாலி முதலானதெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/269&oldid=605601" இலிருந்து மீள்விக்கப்பட்டது