பக்கம்:பாரதித் தமிழ்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடற் பாலத்தில் வர்ணசிரம சபை 255

செய்து கொடுப்பேன். அதில் தோஷமில்லை’ என்றார்.

செம்படவன் நடுங்கிப் போனன். ஐயங்காருக்கு புத்தி ஸ்வாதீனமில்லையென்று நினைக்கத் தொடங் கின்ை.

சேஷய்யங்கார் மொழிகிறார்:-"ஆனல் குலத் தையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். குலத்தளவே யாகும் குணம் என்று பெரியோர் சொல்லியிருக்கிறார்கள். அம்பட்டனுடைய குழந்தை சிறு பிள்ளையாக இருக்கும்போதே ஒருவரும் சொல்லிக் கொடுக்காமல் தானகவே சிரைக்கக் கற்றுக் கொள்ளுகிறது. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்; ராஜா வீட்டுப் பிள்ளை இயற்கை யாகவே சைன்யம் வகுத்து விளையாடிப் பழகுகிறது. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். ஆதலால் பிறவி ஒருவனுடைய குணத்தையும் தொழிலையும் நிர்ணயிக்கத்தான் செய்கிறது. ஆதலால் இப் போதுள்ள ஜாதிப் பிரிவை அதிகமாக மாற்றக் கூட வேண்டியதில்லை. எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்றாேரே மேல் வருக என்று சொல்லி பிராமணப் பதவியிலே சேர்க்க வேண்டும். இதில: திருஷ்டி தோஷம் புத்திசாலித் தன ல்லை. அதை உடனே நிறுத்திப் போடவேண்டும். “தீண்டாத ஜாதி என்கிற பேச்சே கூடாது. அது வெறும் பயித்தியம். நந்தன் சிலையை அறுபத்து மூன்று நாயன்மாருக்கு நடுவிலே வைத்து குருக்கள் மணியடித்துக் கும்பிடவில்லையா? ஜாதியாவது குல மாவது! இவையெல்லாம் லெளகிகம். இதஞலே மனுஷ்ய ஸ்மத்வத்துக்குக் குறைவு நேரிடக் கூடாது. ராம்தாஸ், கபீர்தாஸ் அவர்கள் சொன்னதெல்லாம் பொய்யா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/254&oldid=605579" இலிருந்து மீள்விக்கப்பட்டது