பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

உவமைக்கவிஞர் சுரதா


Milky Way - பால் வழி
Solar System - சூரிய குடும்பம்
Spectro Scoe - ஒளி உடைக்கும் கருவி
நூல் : சூரியன் (1935)
நூலாசிரியை : இராஜேசுவரியம்மையார், எம்.ஏ., எல்.டி.
(சென்னை மேரியரசி கலாசாலை விஞ்ஞான சாத்திர ஆசிரியர்)
Motor Cars, Buses – தற்செயலிகள்

இக்காலத்தில் தற்செல்லிகள் (Motor, Cars, Buses) பெரு வழக்காக ஓரிடமிருந்து மற்றோரிடம் போவதற்கு அமைந்துள்ளன. அவற்றில் ஆட்களை விதித்த எண்ணிற்கதிகமாக ஏற்றுவது ஒரு தீரா நோய் ஆய்விட்டது.

நூல் : மணிமாலை (1935) பக்கம் -148
நூலாசிரியர் : கா. சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ., எம்.எல்.,
Inventive Genius – கற்பனைத் திறல்

மனிதன் பெருமை பாராட்டிக் கொள்வதற்குக் காரணமாயுள்ள பல விஷயங்களுள் முக்கியமானது அவனுடைய கற்பனைத் திறல் (inventive Genius) அஃதாவது, யந்திர தத்துவங்களை (Mechanical Principles)க் கண்டுபிடித்துப் பிரயோகித்து, அவை தன் காரியங்களுக்குப் பயன்படுமாறு செய்யும் சக்தியாம்.

நூல் : விவேக சந்திரிகை மூன்றாம் புத்த்கம் (1935)
நூலாசிரியர் : தி. அ. சாமிநாத ஐயர்
(ஆரியா பத்திரிகை ஆசிரியர்)


Oriental – கீழ்ச்சீமை

ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமான வாஸ்து முறை ஏற்பட்டிருக்கின்றது. ஆதலால் கட்டிட முறைகளுள் கிரீக்கு, உரோமன், காதிக்கு, ஒரியென்டல் (கீழ்ச்சீமை) என்னும் பற்பல முறைகள் இருக்கின்றன.

நூல் : பக்கம் - 43