பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

133


நூல் : மூன்றாம் பாட புத்தகம் (1934), பக்கம் , 91
(நான்காம் வகுப்பு)
நூலாசிரியர் : கா. நமச்சிவாய முதலியார்
(சென்னை, இராஜதானி கலாசாலை மாஜித் தமிழாசிரியர்)
Bus - பெருவண்டி

சென்னையுள்ளூரில் ஓடும் பெருவண்டி (Buses)களில், ஏறுகிறவர்களிடம் கூலி வாங்கினாலும் சீட்டு தருவதில்லை. அதனால் ஒருவரிடம் பலமுறை ஒரே பிராயணத்தில், கார் நடத்துவோன் காசு கேட்க நேரிடுகிறது.

கா. சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ.எம்.எல்.,
உயர் பதிப்பாளர், 'மணிமாலை' 1935
பக்கம் - 448-49
Open Book – விரிசுவடி

பிராணிகளுக்கெல்லாம் மேம்பட்டவன் தானே யென்று மனிதன் பெருமை பாராட்டுகிறான். ஆயினும், ஒவ்வொரு விஷயத்திலும் இயனிலை (Nature) மனிதனுக்கு முந்திக் கொண்டு, அவனுக்கு வழிகாட்டுகின்றது. இயனிலை (Nature) என்பது ஒரு விரிசுவடி (Open Book) அறிவுள்ள மாக்களெல்லாரும் இந்தச் சுவடியினின்றும் தங்கள் தங்கள் பாடங்களைப் படித்துப் பயின்று வருகிறார்கள்.

நூல் : விவேக சந்திரிகை மூன்றாம் புத்தகம் (1935)
நூலாசிரியர் : தி. அ. சாமிநாத ஐயர் (ஆரியா பத்திரிகை ஆசிரியர்)
Binoculars - குழற் கண்ணாடி
Carbon - கரிச்சத்து
Elements - இயற்பொருள்கள்
Degree - சுழி
Indigo - அவிரி நிறம்
Orange - கிச்சிலி நிறம்
Parallel - நேருக்கு நேர்
Photo Graphic camera - புகைப்படப் பெட்டி