பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

உவமைக்கவிஞர் சுரதா


Record — குறிப்பேடு

(வேதப்புராதனம்) வேதங்கள் மனிதர்களின் பழங்காலத்துக் குறிப்பேடு (Record) ஆகும். இவ்வாறே ஆங்கிலேயர்களும் நம்புகின்றனர்.

நூல் : ஆரிய சித்தாந்தம் 1934), பக்கம் - 6
நூலாசிரியர் : பண்டிட் - கண்ணையா
Belt - அரைப்பட்டிகை

இருவரும் விமானத்தில் ஏறி உட்காந்து கொண்டனர். டிரைவர் ஒவ்வொருவருக்கும் ஓர் அரைப் பட்டிகை (Belt) போட்டு, ஏரோபிளேனிலுள்ள பீடத்திற்கும், அவர்கள் அரைக்கும் மார்புக்கும் தொடுத்துக் கட்டினர் ஏரோபிளேன் மெல்ல நகர்ந்தது, சிறிது விரைவாக ஓடிற்று ஒடும்போதே அது மேலே எழுந்தது; பின்னும் மேலே எழுந்தது.

நூல் : ஆகாய விமானம் (1934), பக்கம் - 14
நூலாசிரியர் : கா. நமச்சிவாய முதலியார்
(சென்னை இராஜதானிக் கலாசாலை

மாஜித் தமிழாசிரியர்)

பர்தா - மறைப்பு அங்கி

வட இந்தியாவிலே இந்துக்களுக்குள் மறைப்பு அங்கி (பர்தா) அணியும் பழக்கம் இருந்து வருகின்றது. இப்பழக்கம் பழங்கால இந்தியாவில் இருக்கவில்லை. முகம்மதியர்களிடமிருந்தே இந்துக்கள் இப்பழக்கத்தைக் கைக்கொண்டனர்.

நூல் : ஆரிய சித்தாந்தம் (1934), பக்கம் : 29
நூலாசிரியர் : பண்டிட் - கண்ணையா
ரோமத் துவாரங்கள் - மயிர்க் கால்கள்

நமது உடலில் மேற்புரம் முழுவதையும் தோல் மூடிக் கொண்டு இருக்கிறது. அந்தத் தோல் சில இடங்களில் அரைக்கால் அங்குல கனமும், சில இடங்களில் கால் அங்குல கனமும் இருக்கிறது. நமது தோல் முழுவதிலும் மிகச் சிறிய துவாரங்கள் நிறைந்திருக்கின்றன. அவைகளுக்கு மயிர்க் கால்கள் அல்லது ரோமத் துவாரங்கள் என்று பெயர்.