8
டாக்டர் முத்து லட்சுமியின்
முதல் சட்டமாக்கிய பெருந்தகையாளர் சீனிவாச சாஸ்திர் என்பவர்! ஆவார்.
அவரைப் போலவே, டி. மாதவராவ் என்பவர், பெண்களுக்குரிய திருமண வயது உயர்த்தப்பட வேண்டும் என்று ஆங்கிலேய அரசுக்கு கோரிக்கை வைத்து, சட்டி வடிவத்தை ஏற்படுத்தினார்.
வேரில் பழுத்த பலா போன்ற விதவைப் பெண்களுக்கு விதவை மணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், விதவை மணம் ஆதரிப்புச் சங்கம், என்ற ஒரு சங்கத்தைத் திவான் பகதுர் ரகுதாத ராவ் என்பவர் சென்னையில் முதன் முதல் துவங்கி செயல்படுத்தினார். அந்த சங்கம் பல விதவைகளுக்கு மறுவாழ்வளித்தது.
வீரேசலிங்கம் பந்துலு என்ற ஓர் ஆந்திர மனிதாபி மானி, பெண்ணுரிமைகளுக்காகவும், பெண்கள் முன்னேற் றத்திற்காகவும், பெரிதும் சங்கங்களை உருவாக்கி, அவர் ஆந்திரத்திற்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் முன்னேற் றத்திற்காகவும் பாடுபட்டார்.
மைசூர் மகாராஜா தனது சமஸ்தானத்தில் ஒரு சட்டம் கொண்டு வத்தார். அதாவது, ஐம்பது வயதுக்கு மேற் பட்ட ஆண்கள் பதினான்கு வயதுக்குட்பட்ட பென்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது; அதே நேரத்தில், பத்து வயதுக்குட்பட்ட பெண்களுக்குத் திருமணம் செய்யக் கூடாது என்பதே அவர் கொண்டு வந்த சட்டமாகும்.
சாரதா என்ற ஒரு சட்டம். அது 1929-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. எல்லா சாதிகளுக்கும் உரிய அந்தப் பொதுச் சட்டத்தில், பெண்களுக்குத் திருமணம் செய்யும் வயது பதினான்கு என்று வரையறுக்கப்பட்டது.
இவர்கள் மட்டுமல்ல; விவேகானந்தர், அன்னி பெசண்ட் அம்மையார், பிராம்ஜி கோவஸ்கி, காந்தியடி