உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

பாஸ்கரத் தொண்டைமான்


யார்மனம்; மாமயிலோன்
வேல்பட்டு அழிந்தது வேலையும்
சூரனும் வெற்பும்; அவன்
கால்பட்டு அழிந்தது இங்கு என்தலை
மேல் அயன் கையெழுத்தே

என்பது பாட்டு, அழகனான குமரனது காலுக்கு வீரக்கழல் ஒன்று அணிவித்து அலங்காரம் அல்லவா பண்ணுகிறார் அவர்.

தமிழ் நாட்டின் தெற்குக் கோடியில், சூரசம்ஹாரம் நடந்த செந்தூரில் இருந்து நாம், சூரசம்ஹாரம் முடிந்த உடன், முருகனே அமைதி அடைய நாடிச் சென்ற அத் திருத்தணிகைக்கே செல்லலாம். அருணகிரியார் இங்கு சென்றது அவரது வாழ்வின் கடைசி காலத்தில் தான். அப்படி அத்தனை நாள் தன்னை அழைக்காத காரணம் என்ன? அப்படி அழைக்காதிருக்க நான் இந்தப் பிரமனுக்குச் செய்த குற்றம் என்ன? என்றல்லவா கேட்டிருக்கிறார். நம்மை எல்லாம் அப்படி அவன் அழைக்காமல் இல்லையே. அழைக்கிறானே. நாமும் விரைவிலேயே செல்லலாம், அருணகிரியார் பாடிய அலங்காரப் பாட்டைப் பாடிக்கொண்டே செல்லலாம்.


கோடாத தேவனுக்கு யான் செய்த
குற்றம் என்? குன்று எறிந்த
தாடாளனே தென்தணிகைக்
குமர நின் தண்டையந்தாள்
சூடாத சென்னியும் நாடாத
கண்ணும், தொழாத கையும்
பாடாத நாவும் எனக்கே
தெரிந்து படைத்தனனே

பாட்டிற்கு விளக்கம் தேவையில்லை அல்லவா? தணிகை சென்றால் அருள்ஞான சக்தி தரனாம். தணிகைக்குமரனை, வள்ளியை, தெய்வயானையை எல்லாம் கண்டு தொழலாம். என்றாலும் அலங்காரம் நிறைந்த அழகனைக் காண வேண்டுமென்றால் கால் கடுக்கவே நடக்க வேணும். இன்னும் உயர்ந்ததொரு பெரிய மலையிலேயே ஏற வேணும். அதுவும் பாண்டிய, சோழ, தொண்டை நாடுகளை எல்லாம் கடந்து அந்தக் கொங்கு நாட்டிற்கே செல்ல