உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முகவரிகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் காந்தியடிகள் சுடப்படுகிறார். இராமநாதபுரம் நகரில் அரண்மனை வாசலில் இருந்து ஒரு கூட்டம் புறப்படுகிறது. எங்கு? நகரின்.கிழக்கே முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் வெளிப் பட்டணத்தில் உள்ள சின்னக்கடைத் தெருவிற்குத் தான். முதலில் அவர்கள் கண்ணில் பட்டது, ஒரு இஸ்லாமியரின் கொல்லுப் பட்டறை. தென்னம்கூரை வேய்ந்த அந்த ஏழைத் தொழிலாளியின் கொல்லுப் பட்டறைக்குத் தீ வைக்கப்பட்டது. ஆனால் மாளிகைகளில் இருந்தவர் களுக்குப் பாதிப்பு இல்லை. இவையெல்லாம் வரலாற்று ஏடுகள் அல்ல; நம் காலத்தில் முன்னால் கண்ட நிகழ்ச்சிகள். சகதியில் புரண்டு எழுந்த எருமை மாடு அரிப்பைப் போக்கிக் கொள்ளக் கல்லில் உரசிக் கொள்வது போல' பறப்பயலுக' 'துலுக்கப் பயலுக' என்று பயலுகள் சேர்த்துத் திட்டுவதில் திட்டுகிறவனுக்குத் தினவைத் தீர்த்துக் கொண்ட சுகம் கிட்டலாம். ஆனால் அது பிரச்சனையைத் தீர்த்துவிடுமா? தீர்த்துவிடாது என்று தெரிந்துதான் செய்கிறான், வெறியை வளர்ப்பதற்காக.

ஆனால் அப்படிப்பட்டவர்களிடையிலும் வித்தியாசமான வர்களைப் படைத்து உலவ விட்டிருக்கிறார் இன்குலாப்; செல்லத்தேவரும் வைத்தியர் அமானுல்லாவும் எடுத்துக் காட்டுகள். ஆள் வலிமையும் தோள் வலிமையும் உடைய செல்லத் தேவரிடம் ஆர்ப்பரித்து வந்த இளைஞர் கூட்டம் கொஞ்சம் அடக்கியே வாசிக்க நேர்கிறது.

வைத்தியர் அமானுல்லா நாகூர் பாபாவால் எவ்வளவு கொம்பு சீவி விடப்பட்டும் கொந்தளித்து எழாத கொள்கையாளர்.

ஆதியில் சோலையூரை விட்டு இங்கு ஏன் வந்தார் அமானுல்லா? அவர் முன்னோர்கள் நாசுவன் (முடி

127

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/128&oldid=969633" இலிருந்து மீள்விக்கப்பட்டது