உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முகவரிகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூறுவதிலிருந்து
வேறுபட்டு நின்றது.

காலில் விழுந்து
கெளரவம் பெறலாம்
என்று சொன்ன
அரவிந்தரிடம்
ஆசி பெறுவதற்கு
நின்று கொண்டிருக்காமல்
சென்று விட்டது

'யாப்புக்கள் மட்டும் கற்று
யந்திரப் படைப்புகள் செய்வதைவிட
தீப்புகுந்தாற்போல் வசனத்தில்
தீட்டிய கவிதை நன்று' என்று
வசன கவிதை புதுக்கவிதை
வளரச் செய்ய
வழிகாட்டியது

‘தேச விடுதலைக்கு மட்டுமோ
தேவி அவதாரம்
மாதர் விடுதலைக்கும்
அவளே மாதா'
என்று பாஞ்சாலியை
சுதந்திர தேவியாய்
இதந்தரும் விதத்தில்
எண்ணிப் பார்த்தது....

'மாமேதை லெனினிடம்
தனியன்பு எனக்கு
ருஷ்யப் புரட்சியை
யுகப்புரட்சி என்றேன்

141

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/142&oldid=970627" இலிருந்து மீள்விக்கப்பட்டது