இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தலைப்பைப் பார்த்ததும்
மலைப்படைகிறேன்....
'பாரதி - கைதி எண் 253'!
உடனே
என் கவிதைகளை நிறுத்திவிட்டு
சிற்பியின் கவிதையை
கணினியில்
வடிக்கச் சொல்கிறேன்
அச்சடிக்கச் சொல்கிறேன்
அடித்து முடிந்ததும்
பிழைதிருத்தும் நோக்கில்
படித்துப் பார்க்கிறேன்
மெய் சிலிர்க்கிறேன்
விழிகளின் விளிம்பில்
கண்ணிர் வந்து
நிற்கக் காண்கிறேன்....
இது
சிற்பி எழுதிய கவிதையா?
இல்லை இல்லை......
மகாகவி பாரதி
கூடுவிட்டுக்கூடு பாய்ந்து
சிற்பி உடலில் புகுந்து
உயிரில் கலந்து
இயற்றிய கவிதை இது
என்று நினைக்கிறேன்
பாரதி வார்த்தையைக்
கடனாய் வாங்கி
'ஆச்சரியம்' இது
135