உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முகவரிகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளந்தலைமுறையினரின் முடியைப் பிடித்து அல்ல மூளையைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது என்பது பற்றியும் மிகுந்த வேதனையோடு சித்திரித் துள்ளார்.

"செடிக்கும் கொஞ்சம் பூக்கள்' சிறுகதையில், ராவியத்து மல்லிகைப் பூச் செடியில் சில பூக்களைப் பறிக்காமல் விட்டுவிடுகிறாள். ஏன் என்று கேட்கும் மைமூனிடம் காலையிலே 'அந்தப் பூவு செடியிலேயே மலர்ந்திருக்கும். மைமூன் குட்டி! செடிக்கும் கொஞ்சம் பூ வேணாமா'? என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்கிறாள் ராவியத்து.

நகரத்தில் வைக்கோல் திணித்த கன்றுக்குட்டியை வைத்துப் பசுவிடத்தில் சொட்டுக்கூட விட்டுவைக்காமல் ஒட்டக் கறக்கும் பால்காரன் இல்லையே இவள்! அவன் ஆடவன் பால் வியாபாரிய! இவளோ, இந்த ராவியத்தோ தாயுள்ளம், கொண்டவள் அல்லவா? அதனால்தான் செடிக்கும் கொஞ்சம் பூக்களை விட்டு வைக்கிறாள்!

'மம்முராம்சா' என்கிற முகமது இபுராகிம் சாகிபு, நாடாளு மன்றத் தேர்தலுக்கு நின்று பெற்ற அனுபவங்களைச் சொல்லும் கதை 'நமது ஜனநாயகத் தேர்தல்' மீது வெளிச்சம் பாய்ச்சும் அங்கதச் சுவை மிகுந்த கதை! தேர்தல் என்பது பணத்திமிங்கலங்களின் பொழுதுபோக்கு என்று உணர்த்துகிற கதை.

'கொரில்லாக்கள் உருவாக்கப்படுகிறார்கள்' என்ற கருத்தை, கடற்கரையில் சுண்டல் விற்கும் பையன்களின் வாழ்க்கைப் பின்னணியோடு உரசிப் பார்த்துச் சொல்லுகிறது 'கொரில்லாக்கள்' என்ற கதை.

ஆழமான கருத்துக்களை சிறிது மென்மையான பின்னணியில் சொல்லும் முயற்சிகள் இவை.

118

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/119&oldid=970849" இலிருந்து மீள்விக்கப்பட்டது