32
இதய
அதுவே பெரிய காரியம் என நினைத்துத் திருப்தியாயிரு. ஆனால் நீ மீண்டு வந்து சேரும் அறநெறியை மாத்திரம் மேலும் மேலும் விரும்பு.
33
இப்பொழுது மனத்தில் நான் எண்ணிக் கொண்டிருப்பது என்ன? இப்பொழுது என் மனத்தின் ஸ்வரூபம் என்ன? அது தற்பொழுது குழந்தையின் மனத்தைப் போன்றுளதா? அல்லது ஒரு யௌவன புருஷனுடைய மனத்தைப் போன்றுளதா? அல்லது ஒரு கொடுங்கோல் மன்னன் மனத்தைப் போன்றுளதா? அல்லது சாதாரணமான மிருகத்தின் மனத்தைப் போன்றுளதா? அல்லது ஒரு கொடிய மிருகத்தின் மனத்தைப் போன்றுளதா? இவ்வாறு அப்போதைக்கப் போது நான் சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
34
உன் மனத்தில் வழக்கமாய் நிகழும் எண்ணங்கள் எத்தகையவோ, அத்தகையதே உன் மனத்தின் லட்சணமும்; ஏனெனில் எண்ணங்களின் சாயம் ஆன்மாவுக்கு ஏறுகின்றது. ஆகையால் எப்பொழுதும் ஆன்மாவை நல்லெண்ணங்களின் சாயத்தில் தோய்க்க
வேண்டும்.
35
ஒரு மனிதன் ஓர் இடத்தில் வாழ்தல் சாத்தியமானால் அவ்விடத்தில் யோக்கியமாக வாழவுங்கூடும். ஆனல் அரண்மனையில் வாழவேண்டியிருக்கிறதே