உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்



ஊற்றின் எழுச்சி

இதற்கு முன்பு பார்த்துப் பழகுவதற்கு வெறுப்பாக இருந்த ஒருவன், அவரை நெருங்கி வந்து கொண்டிருப்பதைத் தாகூர் கண்டனர்; ஆனால், பழைய வெறுப்பே தோன்றாமல், அன்பும் பரிவும் அவனைக் கண்டதும் தனது உள்ளத்தில் உந்துவதை அவர் உணர்ந்தார். அந்தப் புதிய இன்ப உணர்ச்சியைப் பாட்டாக அவர் எழுதினார். ஊற்றின் எழுச்சி’ என்று அதற்குப் பெயரிட்டார்.

அன்று முதல் அவர் கண்டபுதிய மாறுதல் என்னவென்றால், கண்களுக்குப் பயனற்ற பொருளாக எதுவும் கிடையாது என்பதாகும். இயற்கையில் எந்தப் பொருளும், கை புனைந்தியற்றாக் கவின் பெறும் அழகின் பகுதியாகவே தோன்றுகின்றது. அந்த தோற்றமே தாகூர் உள்ளத்திற்கு ஒரு கலை விருந்தாகியது.

இயற்கையின் இந்தக் கண்டுபிடிப்பு அவருக்கு 1882-ஆம் ஆண்டில்தான் தெரிந்தது. இந்த புதிய மாறுதல் அவருக்குப் புறத்தே ஏற்பட்ட மாறுதலன்று; உள்ளத்திலே உதயமான ஒரு புதுமையான மாறுதலாகும்.

இயற்கை அழகு அவரது உள்ளத்திற்கு எப்படி ஒரு புதிய உணர்வையூட்டியதோ, அதே போல-அன்பு நெறியும் அவருக்கு ஒரு புத்துணர்வை புகுத்தியது.

இலக்கிய உலகைக்கலக்கிய ‘துறவி’

இந்தியாவின் மேற்குக் கரையில் அதாவது அரபிக் கடலோரத்திலே உள்ள கத்தியவார் நகரில் தாகூரின் அண்ணன்