24
பெஞ்சமின் ஃபிராங்ளினின்
அச்சகத்தில் இறக்கி அவற்றை அச்சடிப்பார். இதனால் அவர் ஆசிரியராகவும் வண்டியோட்டியாகவும் வாழ்ந்தார்.
தனது பத்திரிகைக்குத் தேவையான பொருள்கள் எதெதுவோ, அவற்றை வாங்கி வைத்து ஒரு ஸ்டேஷனரி கடையையும் உருவாக்கினார். அதனால் அவர் ஒரு வணிகராகவும் விளங்கினார்.
பெஞ்சமின், பஞ்சாங்கம் ஒன்றைத் துவங்கினார். அதற்கு, ‘ஏழை ரிச்சர்டின் பஞ்சாங்கம்’ என்று பெயரிட்டார். அந்த பஞ்சாங்கத்தில் அமெரிக்க நாட்டின் பழமொழிகளை எல்லாம் மக்களுக்கு நினைவுபடுத்தி, அதற்கான ஓவியங்கள், படங்கள், கதைகள், துணுக்குகள், கணக்குகள், உரையாடல்கள், அரசியல் கண்டனங்கள், நையாண்டிகள், புதிர்கள், கவிதைகள், சோதிடச்செய்திகள், கோள்கள் பற்றிய விவரங்கள், மருந்து முறைகள், உணவு முறை குறிப்புகள், நல்வாழ்வுத் துறைக்கான ஒழுக்கங்கள், பருவகால தட்பவெப்ப புள்ளிகள், சந்திர சூரிய மாறுதல்களுக்கு ஏற்ற விதிமுறைகள், காற்றலைகளின் ஏற்ற இறக்கங்கள், வானிலைச் செய்திகள், விவசாயிகளுக்கான பயிர் வகைச் செய்திகள், மூடநம்பிக்கை ஒழிப்புகள், சாஸ்திர சம்பிரதாய விதிமுறைகள், மற்றும் பலவகையான செய்தித் தொடர்புகளுடன் ‘ஏழை ரிச்சர்டின் பஞ்சாங்கம்’ வெளிவந்தது.
இந்த அறிவுபூர்வமான, ஆராய்ச்சி வடிவமான, அறிவியல் முறையான செய்திகளை எல்லாம், புனைப் பெயர்களுடனும், சொந்தப் பெயருடனும், சான்றோர்களின் விளக்கத்துடனும் தவறாமல் எழுதிக்கொண்டு தொடர்பாக வெளி வந்ததால், அந்தந்த துறையைச் சார்ந்த மக்கள் ஏழை ரிச்சர்டு என்ன எழுதுகிறார் என்று மக்கள் எதிர்பார்த்தபடியே இருப்பார்கள். இதனால், பத்திரிகைகள் ஏராளமாக விற்பனையாயின. இந்தப்