4酸警 விஞ்ஞானச் சிக்கல்கள்
ஏாழுது எந்ததுTசவம், போலிஸ் ஸ்டேஷன் சென்றது. துப்பறியும் நிபுணர்கள் பிணத்தைச் சுற்றிப் பார்த்தபடியே சிந்தித்தனர்.
'சவத்தின் மேல் எவ்வித மாசும் மருவும் இல்லையே! பிறகு, எப்படி இறந்தார்?
பெரும் பணக்காரர், தன் விட்டு வாயிற்படி முன்பு அனாதையாகச் செத்துக் கிடப்பானேன்?
'யார் இவருக்கு விரோதிகள்? எதற்காகக் கொல் லப்பட்டார்? கொன்றது யார்?' என்றெல்லாம் காவல் துறையும், துப்பறியும் - துறையும் ஒன்று சேர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தன
இது வரை எவ்வித அடையாளமும் - ஆதாரமும் கிடைக்கவில்லை. துப்பறியும் துறைக்கும் சரி - போலீசுக்கும் சரி!
இவர்களிடையே, தனது அலுவலக பாகஸ்தர் இவ்வாறு அனாதையாகச் செத்துக் கிடந்ததைக் கண்டு அலறித் துடித்துக் கண்ணிர் விட்டபடியே நின்று கொண்டிருந்தார், முதலாமவர்.
'தனக்கும் அவருக்கும் இறக்கும் வரை எவ்வித பகையுமில்லை, யாரை வேண்டுமானாலும் நீங்கள் விசாரித்துக் கொள்ளலாம்.
தொழிலகம் துவங்கியது முதல், இன்று வரை நாங்கள் இருவர்தான்் உரிமையாளர்கள் என்று தணிவான குரலில் பணிவான பாசத்தோடு தொண்டை தழ தழக்கப் பேசினார் - பாவம்'
இதற்குப் பிறகும் கூட, 'யார் கொன்றார்கள்? என்ற சிக்கல், காவல் துறையினையும் - துப்பறியும் துறையினையும் குழப்பியபடியே இருந்தது.