நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
11
ஒவ்வொரு கிறிஸ்துவனிம் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை, உலகுக்கு உரைக்க வேண்டும்; உணர்த்த வேண்டும் என்று கிறித்துவப் பெருமக்களுக்கு யோவான் கட்டளையிட்டார்.
எனவே, "இயேசு கிறிஸ்துதான் மக்களுக்கு மீட்பு: இரட்சிப்பு; அவரால் மட்டுமே நமக்குப் பாவ மன்னிப்பு வழங்க முடியும்;உலகத்திலே பிறந்த மக்களின் பாவங்களை மன்னிக்க மனித குமாரனுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு
இயேசு சிலுவையில் சிந்திய ரத்தம் மட்டுமே மக்களின் சகல பாவங்களை நீக்கும்; மக்களைச் சுத்திகரிக்கும் வல்லமை அதற்குத்தான் உண்டு என்று போதித்த யோவான் என்ற ஞானபோதகர்!
இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு எவருக்கும் பாவ மன்னிப்பு வழங்கும் உரிமை, அதிகாரம் கிடையாது. அவரவர் தங்களது பாகங்களை எண்ணி; மனம் வருந்தி: இனிமேல் செய்ய மாட்டோம் என்று மனம் மாறி; இயேசுவிடம் தன்னை ஒப்படைப்பவர்களுக்கு அந்த பெருமான் நிச்சயமாக பாவமன்னிப்பு வழங்குவார் என்ற நற்செய்தியை அறிவிக்கவே எந்த ஒரு கிறித்துவ ஞான குரு வுக்கும் உரிமை உண்டே தவிர, மற்ற எந்த போப் என்ற குருவுக்கோ வேறு எந்த தீர்க்க தரிசிக்கோ அந்த அதிகாரம் இல்லை என்று அக்கால மக்கள் நம்பினார்கள்!
ஆனால், அந்தக் காலங்களில், அதாவது தினைந்தாம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலங்களில், பாவமன்னிப்புச் சீட்டுக்களைப் பணத்திற்கு விற்று,"உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என ஒரு சீட்டிலே பே ப் என்ற குரு எழுதிக் கொடுத்தாலே, தங்களது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன என்று மக்கள் நம்பி வாழ்ந்து கொண்டிருந்த பழக்கம் இருந்தது.