பக்கம்:மதன கல்யாணி-3.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1 19 ஒசையில்லாமல் நடந்து போய், முன் விவரிக்கப்பட்டபடி கருப்பாயியைக் குத்திவிட்டு ஓடி வந்துவிட்டான். ஆனால், அவளிருந்த ஹாலில் வேறே மனிதர் இருக்கிறார்கள் என்பதை அவன் உணர்ந்து கொண்டான் ஆனாலும், தான் அந்தப் பூத்தொட்டிகளின் மறைவில் மறைந்து மறைந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற அசட்டுத் துணிவைக் கொண்டு அந்தக் கொடிய காரியத்தைச் செய்துவிட்டுத் திரும்பியோடுகையில் சுலபமாகப் பிடிபட்டுப் போனான். அவ்வாறு பிடிபட்ட பின், அவனும் பாலாம்பாளும், சார்ஜண்டு துரை போல வந்த ராஜாயி அமமாளால் வெகு சுலபத்தில் ஏமாற்றப்பட்ட விஷயம் முன்னரே விரிவாகக் கூறப்பட்டது. தனது பங்களாவிலிருந்த சொத்துகளை எல்லாம் அபகரித்துக் கொண்டு தன்னைத் தப்பவைப்பதாகச் சொன்ன சார்ஜண்டு துரை அவ்வாறு செய்யாமல் போய் விடுவாரோ என்றும், அல்லது, ஒருகால் அவர் கமிஷனர் துரை யினிடத்தில் சிபார்சு செய்து தன்னை விடுவிப்பாரோ என்றும் பலவாறு நினைத்துக் கலவரமடைந்தவனாக மைனர் மைலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனிற்குப் போய்ச் சேர்ந்தான். கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரினது மோட்டார் வண்டியில் கருப்பாயியை வைத்துக் கொண்டு போன ஆட்கள், அவளை ராயப்பேட்டை வைத்திய சாலையில் விட்டுவிட்டு விரைவாக மைலாப்பூருக்குப் போய், அந்த ஊர்ப் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தமது ரைட்டரை அவ் விடத்தில் வைத்துவிட்டு மைனர் வந்தவுடனே அவனை லாக்கப் பில் பந்தோபஸ்தாக அடைத்து வைக்கும்படி சொல்லி விட்டு, அதே மோட்டார் வண்டியில் ஏறிக்கொண்டு ராயப்பேட்டை வைத்தியசாலைக்குப் போய்ப் பார்க்க, கருப்பாயி பிழைக்க மாடடாள் என்றும, இன்னம் ஒரு நாழிகைக்குள் இறந்து போய் விடுவாள் என்றும், அவள ஏதோ வாக்குமூலம் கொடுக்க விரும்பு கிறாள் என்றும் டாக்டர் துரை சொல்ல, அதைக் கேட்ட சப் இனஸ் பெக்டா, உடனே டெலிபோன் மூலமாக மாஜிஸ்டிரேட்டை அழைத்துப் பேசி, உடனே புறப்பட்டு அங்கே வருமபடி கேட்டுக் கொண்டார். துாமரணமாக இறப்போர் சொல்லும் வாக்குமூலத்தை மாஜிஸ்டிரேட்டு தான் வாங்க வேண்டும் என்பதும், அப்படி வாங்கப்படட வாக்குமூலம் கச்சேரிகளில் சரியான சாட்சியமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/123&oldid=853253" இலிருந்து மீள்விக்கப்பட்டது