புலவர் என்.வி. கலைமணி 23
சரி, அவருடைய பரிவாரங்கள் அற்பத்தின் வாழ்த்தொலிகளைப் பெற்றிட, பயிற்றுவிக்கப்படவில்லை.
தன்னால் இயன்றவரை, தனது ஆட்சித் தேரை இழுக்கும் பரிகளை, அடக்கி ஆளவே அவற்றின் கடிவாளங்களை இழுத்துப் பிடித்தார்:
அவருடைய ஆட்சியின் லகானில் கைநழுவிக் கட்டுடைந்து போன சில காட்டுப் பரிகள், இன்று நடுவீதியிலே கணைத்து அலைவதை நாம் காண்கிறோமே - அதன் தத்துவம்தான்் என்ன?
இருண்டுபோன தனது இல்லத்தை ஒளிமயமாக்கிட, கடன் பெற்று எண்ணெய் வாங்கி கொளுத்துக்கின்ற ஒர் ஏழையைப் போல, அந்த வெள்ளி நிலா, அதோ தனது தலையைக் காட்டுகின்றது.
ஒருவன் தனது இதயத்திலே - உண்மை, நேர்மை, நாணயம் இருக்கின்றனவா என்று தேடிப் பார்ப்பதற்காக, எத்தனை நூற்களை, அந்த மனிதன் படிக்கின்றான் தெரியுமா?
சமணம் சமைத்ததைப் பின்பற்றுகின்றான்! பெளத்தம் போதித்ததைப் பேசுகின்றான்: இயேசு வழியே இனியது என்கின்றான்! இஸ்லாமே இத்தனைக்கும் சிறந்தது என்று வாதாடுகின்றான்!
சைவ, வைணவங்களை நூலிழைகடிடத் தவறாமல் படிக்கின்றான்! ஒதுகின்றான்! பஜனை செய்கின்றான் - பாவம். இறுதியில், ஒன்று துறவியாகின்றான்! அல்லது சமையப் புலவனாகின்றான்! இல்வாழ்வை விட்டு ஒதுங்கியே நிற்கின்றான்!
எதற்காக, எந்தெந்தப் புத்தகங்களை அவன் ஏந்தி னானோ! அவை அவன் கைகளிலே கிடைப்பதில்லை!
ஆனால், அண்டத்துக்கே ஆதார விளக்கங்களை அறை கின்றான்! ஆனந்தப் பூர்த்திக்கே வழிகாட்டுகின்றான்!