இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழஞ்சலி மனிதன் மழலையினின்று வளர்ந்தவனன்றோ! குழவி புத்தி: வாலிபத்தில் வடிவம் காட்டுவது இயல்புதான்! வானவில்லைக் கண்டேன்! கைகொட்டி நகைக்கும் சிறுபிள்ளையானேன்! எனது எண்ணங்கட்கு இறக்கைகள் முளைத்தன! வானவில்லின் விளிம்புகளில் நின்றவாறே உலா வர ஆரம்பித்தேன்! வில்லின் ஒருமுனை வழியாக ஏறினேன்! அதன் உச்சியை அடைந்தேன்! என்னுடைய எண்ணங்கள் எதையோ ஒன்றை அறிவதைப் போல எண்ணித் துடித்தன! ஏதோ ஒன்றை நான் பெறுவதும், அதை இழக்கத் தயாராக இல்லாததும் போன்ற உள்ளுணர்வு எனக்கு ஏற்பட்டது: தன்னம்பிக்கையை நான் தழுவிக் கொண்டேன். சோர்வோ - தளர்வோ என்னை நாட அச்சப்பட்டன! வானவில்லின் விளிம்புகளில் நின்றவாறே, நான் வையத்தை நோக்கினேன்! நான் உயரமானவன்! மிகமிக உயரமானவன்! உலகத்தை விட உயர்ந்தவன் - என்ற தற்பெருமை கொண்டேன்! பூமியின் கரடுமுரடான முகத்தைக் கண்டேன், கிண்டல் செய்தேன்! 30