இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மூலம் காண முடியாத ஒரு ஜீவ நதிபோல் எங்கிருந்தோ உலகத் தொழிலாளர் உள்ளங்களிலே உத்வேகம் அளிக்கிறாய். தோழர் அலெண்டே, இப்போதும் - 彦 நித்திரை கொண்டிருப்பதாய் நினைக்கிறோம். சங்கொலிக்கும் சாயுங் காலத்தில் வீடு திரும்பித் திண்ணையில் பகல் வேலை முடித்து வந்த அலுப்பில் படுத்துறங்கும் ஒரு பாட்டாளியைப் போல் நீ நித்திரை கொண்டிருப்பதாய் நினைக்கிறோம். இப்போதும் - O உன் நித்திரையில் வரும் கனவுகளில் எல்லாம் சிலியின் செங்கதிர் உதயமே தெரியும் செம்படை அணிவகுப்பே தென்படும். தோழர் அலெண்டே, உன் புதைகுழியில் உன் துணைவிதுரவிய 62 С идут