பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் (5) கம்பனும் பாரதிதாசனும், "நோக்கெதிர் நோக்கு" பெண்களின் விழிகளையும், அவற்றின் நோக்கையும் பாடாதவன் கவிஞன் அல்லன். உலகப் பெருங்கவிஞன் சேக்ஸ்பியர், பாவையின் கண்களைப் பல்கலைக் கழகம்’ என்றும், அவற்றின் நோக்கை மெளன. மொழிகள்' என்றும் பாராட்டுகிறான். ஆங்கில மெய்விளக்கக் கவிஞரான (Metaphysical Poet) ஜான்டன் தன் காதலியைப் பாராட்டும்போது, “உன் பார்வை நம் கண்களைத் தைத்துப் பிணைக்கும் நூல்' என்று பாடுகிறான். தமிழில் கண்களைப் பற்றிப் பலரும் பாடியிருந்தாலும், அவற்றின் நோக்கைப் பற்றி வள்ளுவரைப் போல யாரும் விரிவாகவும், நுணுக்கமாகவும் பாடவில்லை. வள்ளுவர் காதலியின் நோக்குப்பற்றிக் குறிப்பறிதல் என்ற தலைப்பில் ஒரு தனி அதிகாரமே எழுதியிருக்கிறார்: காமத்துப்பாலில் வேறு அதிகாரங்களிலும் ஆங்காங்கே குறிப்பிட்டுச் செல்லுகிறார். காதலியை முதன் முதலில் சந்திக்கும்போது அவள் நோக்கு எப்படியிருக்கும் என்பதில் தொடங்கிப் படிப்படியாக விளக்கிக் கொண்டும் செல்லுகிறார். வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் களவியலில் காதலரின் நோக்குக்கும் இலக்கணம்